முனைவர் ச. வெ. இராமன் பல்கலைக்கழகம், காண்டுவா
முனைவர் ச. வெ. இராமன் பல்கலைக்கழகம், கந்த்வா (Dr. C.V. Raman University, Khandwa) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[3] இது இந்தியாவில், மத்தியப் பிரதேசத்தில், காண்டுவா மாவட்டத்தில், காண்டுவா - இந்தூர் சாலைக்கு அருகில், பால்கந்த்சுரா கிராமத்தில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச நிஜி விஸ்வவித்யாலே (ஸ்தாபன ஏவம் சஞ்சலன்) சன்ஷோதன் ஆதினியம், 2018ன் கீழ் அகில இந்திய மின்னணுவியல் மற்றும் கணினித் தொழில்நுட்ப சங்கத்தால் 2018-ல் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.[4] இந்த அமைப்பின் மூலம் ஸ்ரீகிருஷ்ணா பல்கலைக்கழகமும் சர்தார் படேல் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் ஏழு கல்விப் புலங்களில் பல்வேறு பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. இது இந்திய இயற்பியலாளர் ச. வெ. இராமனின் பெயரால் அழைக்கப்படுகிறது.
உருவாக்கம் | 2018 |
---|---|
வேந்தர் | சந்தோசு சொளபே[1] |
துணை வேந்தர் | அமிதாப் சாக்சனா[2] |
அமைவிடம் | பால்காண்டுசுரா, காண்டுவா மாவட்டம் , , 21°49′19″N 76°13′37″E / 21.822°N 76.227°E |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
கல்வி புலம்
தொகுஇந்த நிறுவனம் ஏழு கல்விப் புலங்கள் மூலம் பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது:[5]
- கலை புலம்
- விவசாய புலம்
- நுண்கலை புலம்
- வணிகவியல் புலம்
- கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- மேலாண்மை புலம்
- அறிவியல் புலம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chancellor Message". www.cvrump.ac.in. Archived from the original on 28 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Vice Chancellor Message". www.cvrump.ac.in. Archived from the original on 28 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "State-wise List of Private Universities as on 10.12.2018" (PDF). www.ugc.ac.in. University Grants Commission. 12 November 2018. பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
- ↑ "Madhya Pradesh Niji Vishwavidyalay (Sthapana Evam Sanchalan) Sanshodhan Adhiniyam, 2018" (PDF). Madhya Pradesh Gazette. Government of Madhya Pradesh. 26 July 2018. பார்க்கப்பட்ட நாள் 28 February 2019.
- ↑ "Dr. C.V. Raman University". www.cvrump.ac.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.