முன்னூர் கோயில்

முன்னூர் சிவன் கோயில் (Mannur Temple) என்பது கேரளத்தின், கோழிக்கோடு நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இந்த கோயிலானது திருவன்னூர் சிவன் கோயிலை மாதிரியாக கொண்டு கட்டப்பட்டது.

இக்கோயிலின் கஜபிருஷ்ட வடிவாக்கபாணியானது இருநூறு ஆண்டுகள் பழமையானது. அன்றாடம் சிவலிங்க பூசையை பரசுராமர் திருவன்னூரில் தொடங்கி முன்னூரில் முடிப்பதாக ஐதீகம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இக்கோயிலின் உச்சிகாலப் பூசை சிறப்புவாய்ந்ததாக உள்ளது. ஆண்டுதோறும் சிவராத்திரி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்பபடுகிறது.[1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னூர்_கோயில்&oldid=3621289" இலிருந்து மீள்விக்கப்பட்டது