முப்புள்ளி புல் மஞ்சள் (பட்டாம்பூச்சி)

பூச்சி இனம்
முப்புள்ளி புல் மஞ்சள்
முப்புள்ளி புல் மஞ்சள் - மட்டக்களப்பு, இலங்கை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Eurema
இனம்:
E. blanda
இருசொற் பெயரீடு
Eurema blanda
Boisduval, 1836

முப்புள்ளி புல் மஞ்சள் அல்லது மஞ்சள் புல்வெளியாள் (Three-Spot Grass Yellow, [Eurema blanda]) என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் வெள்ளையன்கள் (பியரிடெ) குடும்ப சிறிய வகை மஞ்சள் பட்டாம்பூச்சி.

விளக்கம் தொகு

இந்த மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சியின் முன் இறக்கையின் பின்புற உச்சியில் பழுப்பு நிறத் திட்டு இருக்கும். பருவநிலை உலர்ந்து இருக்கும்போது, இந்த பழுப்புத் திட்டை தெளிவாகக் காணலாம். முன்இறக்கைகளின் கீழ்ப்புறம் உடல் அருகே மூன்று புள்ளிகள் காணப்படுவதே இந்த புல்வெளியாள் வகையின் பெயருக்குக் காரணம். இந்த வண்ணத்துப்பூச்சி இறக்கைகளை மடித்து வைத்து இளைப்பாறுவதால் முப்புள்ளிகளை தெளிவாகக் காண்பது கடினம். இவை இறக்கையை விரித்தால் 4 செ.மீ.க்கும் குறைவாகவே இருக்கும்.[1]

குறிப்புகள் தொகு

  1. ஆதி வள்ளியப்பன் (17 மார்ச் 2018). "மஞ்சள் புல்வெளியாள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புக்கள் தொகு

  • [1] Life cycle of Eurema blanda.