மும்தாஜ் பேகம் (பெங்களூர்)

மும்தாஜ் பேகம் (Mumtaz Begum)(பிறப்பு 1956) என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரின் முன்னாள் மாநகரத் தந்தை ஆவார். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் இந்த மாநகரின் முதல் முஸ்லிம் மாநகரத் தந்தை நான்காவது பெண் மாநகரத் தந்தை எனும் பெருமையினைப் பெறுகின்றார். இவர் 43வது மாநகரத் தந்தையாக 30 நவம்பர் 2005 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரிய பெங்களூர் மாநகர பேரவைக்கு மூன்று முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேகம் ஆவார். இவர் காலனித்துவ ஆட்சியின் போது பிரித்தானியத் தரைப்படை குடியிருப்பின் ஒரு பகுதியாக இருந்த சிவாஜி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர், 1984ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டபோது பெங்களூர் நகர மாநகராட்சியின் துணை மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

மும்தாஜ் பேகம் 1984-ல் முதல் முறையாக மாநகர உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜனதா கட்சியிலிருந்தார். 1984-ல் துணை மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு 1988-ல் காங்கிரசு கட்சியில் இணைந்தார். 1990-ல் இரண்டாவது முறையாக மாநகர உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பதவிகள்

தொகு
  • 1984 மாநகரத் துணை மாநகரத்தந்தை, பெங்களூர்[1]
  • 1991-95: பொதுச் செயலாளர், பெண்கள் பிரிவு, கர்நாடக பிரதேச காங்கிரசு கட்சி[2]
  • 1993-97 : தலைவர், தொகுதி காங்கிரசு குழு, சிவாஜிநகர், பெங்களூர் [2]
  • 1995-97: பொதுச் செயலாளர், பெங்களூர் நகர மாவட்ட காங்கிரசு[2]
  • 1997–2002 : பொதுச் செயலாளர், கர்நாடக பிரதேச காங்கிரசு[2]
  • 2001 : தலைவர், மேல்முறையீடுகள் மீதான நிலைக்குழு[1]
  • 2003 : உறுப்பினர், கல்வி மற்றும் சமூக நீதிக்கான நிலைக்குழு [1]
  • 2002–2005 : செயற்குழு உறுப்பினர், கர்நாடக பிரதேச காங்கிரசு[2]
  • 2005–2006: மாநகரத்தந்தை, பெங்களூர் மாநகரம்

உலக மேயர் வேட்பாளர்

தொகு

இலண்டனில் உள்ள சிட்டி மேயர் அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 2006ஆம் ஆண்டுக்கான உலக மேயர் பட்டத்திற்கான இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில் மும்தாஜ் பேகம் இடம்பெற்றிருந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Mumtaz Begum elected Mayor". தி இந்து (India). 30 November 2005 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051201114912/http://www.hindu.com/2005/11/30/stories/2005113019920300.htm. பார்த்த நாள்: 24 March 2010. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 kashif (24 June 2006). "Mumtaz Begum (1956- ):Politics". New Delhi: urdustan.com network. Archived from the original on 30 January 2013. பார்க்கப்பட்ட நாள் 11 August 2012.
  3. Mayors, Mayors (2006). "Comments in support of Mumtaz Begum". London: City Mayors Foundation. பார்க்கப்பட்ட நாள் 11 August 2012.