மும்மொழிக் கொள்கை

மும்மொழிக் கொள்கை என்பது  1968ஆம் ஆண்டு இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால், மாநிலங்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டது. 1968 தேசியக் கொள்கை முடிவின்படி "இந்தி, ஆங்கிலம் மற்றும் நவீன இந்திய மொழி (முன்னுரிமை தென்னிந்திய மொழிகளில் ஒன்று) இந்தி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் இந்தி பேசாத மாநில மொழி ஒன்று என்பதாகும்.[1]

தென்னிந்தியாவின் இந்தி பேசாத மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் மற்றும் முக்கியமாகத் தமிழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளுக்கு விடையளிக்கும் வகையில் இந்தக் கொள்கை வகுக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரையின் முயற்சியால் மூன்று மொழிக் கொள்கை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை.

வரலாறு

தொகு

இந்த மும்மொழிக் கொள்கைப் பரிந்துரையானது பல்கலைக்கழக மானியக்குழுவால் முதன்முதலில் 1948-49இல் தரப்பட்டது. பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பிற பன்மொழி நாடுகளின் முன்னோடிகளை மேற்கோள் காட்டி இது பரிந்துரைக்கப்பட்டது. என்றாலும் இந்தியாவில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டியது தேவைப்படவில்லை என்று பல மாநிலங்களில் கருதப்பட்டது. நவீன இந்தி ஒரு சிறுபான்மை மொழி என்பதை ஏற்றுக் கொண்டாலும், கன்னடம், தெலுங்கு, தமிழ், மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி போன்றவற்றைவிட மேன்மை கொண்ட மொழியாக அது இல்லை. என்றாலும்   ஒவ்வொரு இந்திய மாநிலமும் கூட்டாட்சிச் செயல்பாடுகளில் பங்கேற்கக்கூடிய வழிமுறையாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியைக் கொண்டுவர இந்தி ஆணையம் மேலும் பரிந்துரைத்தது.[2]

திறனாய்வு

தொகு

1967-69 காலப்பகுதியில் தமிழக முதல்வராக இருந்த சி.என்.அண்ணாதுரை, தமிழ்நாட்டில் இந்தி கற்க வேண்டிய கட்டாயத்தை எதிர்த்தார், "வெளி உலகத்துடன் எங்களை இணைக்க ஆங்கிலம் இருக்கும்போது அதுவே இந்தியாவுக்குள்ளும் இணைப்பு மொழியாக இருக்க வல்லது. இது எப்படியென்றால் பூனை செல்ல ஒரு பெரிய துளை இருக்கும் போது பூனைக்குட்டி செல்ல என்று சுவரில் தனியாக ஒரு சிறிய துளை போடுவதைப் போன்றது. பூனைக்கு உள்ள பெரிய துளையே பூனைக்குட்டி செல்லவும் போதுமானது[3] என்றார்.

இந்த மும்மொழி கொள்கையின் தோல்வியைக் கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியலாளர் பிரையன் வெய்ன்ஸ்டீன், "இந்தியல்லாத மொழி பேசும் மாநிலங்கள் (1968) இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை" என்று கூறினார்.[4] 1986 ஆண்டைய தேசியக் கல்விக் கொள்கை 1968 மொழிக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Three Language Formula". Government Of India Ministry Of Human Resource Development Department Of Education. Archived from the original on 22 February 2012. Retrieved 16 May 2016.
  2. "Report of the University Education Commission (December 1948 – August 1949) Volume I" (PDF). Ministry of Education, Government of India. 1962. p. 280. Retrieved 16 May 2016. Every boy and girl must obviously know the regional language, at the same time he should be acquainted with the Federal language, and should acquire the ability to read books in English.
  3. "Anna and the Dravidian Movement". South Asia Masala. Retrieved 17 May 2016.
  4. Weinstein, Brian (1990). Language Policy and Political Development. Greenwood Publishing Group. p. 95. ISBN 0-89391-611-0. Retrieved 16 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மொழிக்_கொள்கை&oldid=4219650" இலிருந்து மீள்விக்கப்பட்டது