முயலும் ஆமையும் கதை
முயலும் ஆமையும் கதை தமிழ்ச் சூழலில் மிகப்பரவலாக வழங்கிவரும் செவி வழி நீதிக் கதையாகும்.இக்கதை சோம்பேறித்தனம் மற்றும் ஏளனம் போன்றவற்றின் விளைவுகளைக் கூறுகிறது.சில சிறுவர் இலக்கிய நூல்களில் இக்கதை அச்சுவடிவத்திலும் காணக்கிடைகிறது. ஒரு முயல்,நரி மற்றும் சில விலங்குகள் இக்கதையின் பாத்திரங்களாக வருகின்றனர்.
கதைச் சுருக்கம்
தொகுஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன.அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம்.அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது.மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக ஒருநாள் முயல் தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது.முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து ஆம் என்றது.பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது.ஒரு முடிவிடமும் அறிவிக்கப்பட்டது.முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது.ஆமையோ மிகவும் மெதுவாகவே சென்றது.முக்கால்வாசி தூரம் ஓடி முடித்த முயல் ஆமை மெதுவாக வருவதைக்கண்டு ஒருமரத்தின் கீழ் நித்திரை செய்தது.ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது.அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல். ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது.எனினும் முயலுக்கு முதல் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.
இக்கதை முயலாமையை கூறும் கதை எனவும் விபரிக்கப்படுகின்றது.