முரியா மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

முரியா மக்கள் (Muria) பழங்குடி மக்கள் ஆவார். இந்திய அரசு, இம்மக்களை பட்டியல் பழங்குடியினத்தில் வைத்து கல்வி, பொருளாதார சலுகைகள் வழங்குகிறது. முரியா மக்கள், கோண்டுகளின் ஒரு பிரிவினர் ஆவார். முரியா மக்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டக் காடுகளில் கூட்டமாக சேர்ந்து வாழ்கின்றனர். அனைத்துண்ணிகளான முரியா மக்கள் மது பானம் விரும்பி பருகுவர். முரியா பழங்குடி மக்கள் பாரம்பரியமாக ஒற்றுமையுடன் கூட்டாகக் காடுகளில் உள்ள காய்-கனிகள், இறைச்சிக்கான உணவு, தேன் சேகரித்து தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.

முரியா மனிதன்
முரியா பெண்கள்
முரியா பழங்குடி ஆண் - பெண்

திருமணத்திற்கு முன், முரியா பழங்குடி இளம் காதலர்கள் பாலுறவில் ஈடுபட தனித் தங்குமிடங்கள் அமைத்துள்ளனர். பெண் கர்ப்பம் தரித்த பிறகே, ஆணுடன் திருமணம் நடத்தி வைக்கும் வழக்கம் உள்ளது.

நடன அலங்கரிப்பில் முரியா பெண்கள்
முரியா நடனம், பஸ்தர் மாவட்டம்

வாழிடம் தொகு

முரியா மக்கள் தண்டகாரண்யம் பகுதிகளில் ஒன்றான கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தின் பாயும் இந்திராவதி ஆற்றுப் பகுதியில் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றனர்.

சமயம் தொகு

முரியா மக்கள் ஆன்ம வாத நம்பிக்கை கொண்டோர் எனிலும் குல தெய்வங்களையும் வழிபடுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரியா_மக்கள்&oldid=2710968" இலிருந்து மீள்விக்கப்பட்டது