முருகன் அல்லது அழகு (நூல்)

முருகன் அல்லது அழகு என்பது திரு. வி. க இயற்றிய ஒரு நூல் ஆகும்.[1]

வரலாறு

தொகு

காரைக்குடியிலிருந்து வெளிவந்த குமரன் என்னும் திங்கள் மலரின் முதலிதழில், திரு.வி.க அவர்கள் முருகன் என்னும் கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரை பெரும் பாராட்டைப்பெற்றது. அதனை நூலாக வெளியிடுமாறு அவரின் நண்பர்கள் வற்புறுத்தினர். இதனால் அக்கட்டுரையில் மேலும் சில பகுதிகளைச் சேர்த்து முருகன் என்னும் பெயரில் நூலாக 1925-இல் வெளிவந்து. இரண்டாம் பதிப்பில் அழகைப் பற்றி அவர் பால் கருக்கொண்டிருந்த பல புதுப்பொருள் கூட்டி விரிவாக்கி, நூலின் உள்ளுறைக்கேற்ப நூலுக்கு முருகன் அல்லது அழகு என்னும் தலைப்பு மாற்றம்மட்டு 1927-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. [2]

திரு.வி.க.வின் முருகன் அல்லது அழகு, சங்கப் புலவர் நக்கீரரின் திருமுருகாற்றுப்படையின் நுட்பத்தை விளக்கும் ஓர் ஆராய்ச்சி நூல் என்பர். [3] இந்நூலைப் பாரி நிலையம் பதிப்பகத்தார் 1994 ஆண்டு 18-ஆம் பதிப்பாக வெளியிட்டுள்ளனர். முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைப் போல் இந்நூலில் 12 கட்டுரைகள் அமைந்துள்ளன.

இதன் பகுதிகள்

 1. முருகன் பொருளும் பொதுமையும்
 2. அழகின் இயலும் கூறும்
 3. முருகின் தொன்மை
 4. இயற்கைவழி அழகைக் காண்டல்
 5. பாட்டும் ஓவியமும் இசையும் பிறவும்
 6. முருகனைக் காண முனைப்பை யறுத்தல்
 7. அருணகிரியாரும் பெண்ணுலகும்
 8. உறுதியும் நோன்பும்
 9. பொதுநெறியும் தமிழும்
 10. பின்னைத்திரிபுகள்
 11. இயற்கையும் முருகனும்
 12. வேண்டுகோள்[4]

குறிப்புகள்

தொகு
 1. "முருகன் அல்லது அழகு". கூகுல் புக்ஸ். பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 2. முருகன் அல்லது ஆழகு, (நூன்முகம்)
 3. முருகன் அல்லது ஆழகு, பக்.4
 4. முருகன் அல்லது ஆழகு, பக்.6

வெளி இணைப்புகள்

தொகு

யூடியூபில், முருகன் அல்லது அழகு நூலைப்பற்றிய, சொற்பொழிவு