முருகையன் குமரேசன்

எம். குமரேசன் அல்லது முருகையன் குமரேசன் (பிறப்பு: 13 சனவரி 1967); (மலாய்: M. Kumaresan; ஆங்கிலம்: M. Kumaresan; Murugayan Kumaresan) என்பவர் மலேசியாவின் தடகள சைக்கிள் ஓட்ட வீரர். 1988-ஆம் ஆண்டு மற்றும் 1992-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.[1]

எம். குமரேசன்
M. Kumaresan
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்முருகையன் குமரேசன்
Murugayan Kumaresan
தேசியம்மலேசியர்
பிறப்பு13 சனவரி 1967 (1967-01-13) (அகவை 57)
பத்து பகாட், ஜொகூர், மலேசியா
விளையாட்டு
விளையாட்டுசைக்கிளோட்டம் தடகளம்; திறந்த சாலை
நிகழ்வு(கள்)ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்கு இருமுறை தகுதி பெற்றவர்
கழகம்தேசிய விளையாட்டு மன்றம் (மலேசியா)
National Sports Council of Malaysia

எம். குமரேசன் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளின் சைக்கிளோட்டத்தில் ஒரு ஜாம்பவான் என்று புகழப் பட்டவர். 1985-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை, தடகளம் மற்றும் திறந்த சாலை சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் 9 தங்கம்; 12 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்.[1]

மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது

தொகு

இவர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு முறை தகுதி பெற்றவர். அத்துடன் 1992-ஆம் ஆண்டு, பார்சிலோனா ஒலிம்பிக் சைக்கிளோட்ட இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் மலேசியர் என்ற பெருமையையும் பெறுகிறார்.[2]

இவரின் சிறப்புமிக்க விளையாட்டுத் துறைச் செயல்பாடுகளுக்காக, 1987-ஆம் ஆண்டின் மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 Tan, Wu Zhen (29 March 2018). "M. Kumaresan is a legend in Malaysian SEA games cycling. Between 1985 to 1997, he won a total of 21 medals (9 gold and 12 others), in events including track and open road cycling. He also qualified twice for the Olympic Games, and he became the first Malaysian to qualify for a cycling final in the 1992 Barcelona Olympics". பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
  2. "Murugayan Kumaresan (born 13 January 1967) is a retired track cyclist from Malaysia, who represented his country at the 1988 Summer Olympics and the 1992 Summer Olympics". frontend (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.[தொடர்பிழந்த இணைப்பு]

மேலும் காண்க

தொகு

மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது


"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகையன்_குமரேசன்&oldid=4008969" இலிருந்து மீள்விக்கப்பட்டது