முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேசுவரர் கோயில்

முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேசுவரர் கோயில் என்பது ஈரோடு மாவட்டம், சென்னிமலை-அரசலூர் சாலையில் அமைந்துள்ள முருங்கத்தொழுவு என்ற கிராமத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். [1] இச்சிவாலயம், முருகன் மற்றும் பிரம்மனால் வழிபடப்பட்டதாகும். இத்தலத்தின் மூலவர் பிரம்மலிங்கேசுவரர் என்றும், அம்பிகை வடிவுள்ள மங்கை என்றும் அழைக்கப்படுகிறார்.

முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேசுவரர் கோயில்
பெயர்
பெயர்:முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:முருங்கத்தொழுவு
மாவட்டம்:ஈரோடு
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரம்மலிங்கேசுவரர்
தாயார்:வடிவுள்ள மங்கை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:
  • சிவராத்திரி
  • மார்கழி திருவாதிரை
  • நவராத்திரி
  • ஆடி வெள்ளிக்கிழமை
  • ஆடி அம்மாவாசை
  • கார்த்திகை சோமாவாரம்
  • பங்குனி முதல் சோமாவாரம்
  • கடைசி சோமாவாரம்
  • சித்திரை வருடப் பிறப்பு
  • ஐப்பசி அன்னாபிசேகம்

இக்கோயிலில், கிபி 1291ல் சுந்தரபாண்டிய மன்னர் திருப்பணி செய்தமைக்கு சான்றாகக் கல்வெட்டுப் பதிவு கண்டறியப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சிவபெருமானை பிரம்மன் வணங்கியுள்ளார். அதனால் பிரம்மா வழிபட்ட சிவாலயங்களுள் இந்த சிவாலயமும் ஒன்றாக உள்ளது. இக்கோயிலின் தீர்த்தகுளம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தில் முருகப்பெருமான் நீராடி வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளார். அதனால் இவ்விடத்திற்கு முருகத்தொழுவு என்று பெயரேற்பட்டது.

சன்னதிகள்

தொகு

அர்த்த மண்டபத்தில் விநாயகரும், மகா மண்டபத்தில் நந்தி மற்றும் நால்வர் சன்னதிகளும் உள்ளன. துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி ஆகியோர் கோட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். [2]

இத்தலத்தின் மூலவரான பிரம்மலிங்கேசுவரர் ருத்ராட்சப் பந்தலின் கீழ் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு தெற்கே வடிவுள்ள மங்கை அம்மன் சன்னதி உள்ளது. வெளிச்சுற்றில் கன்னிமூல கணபதி, சிவசூரியன், சந்திரன், வள்ளி, தெய்வானை உடனுறை முத்துக்குமார சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், நவகிரகங்கள், சனீசுவரர் மற்றும் காலபைரவர் ஆகிய துணைத் தெய்வங்களுக்கான சன்னதிகள் அமைந்துள்ளன.

இக்கோயின் ஈசான்ய மூலையில் பிரம்மத் தீர்த்தக் கிணறு உள்ளது. இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமாகும்.

சிறப்பு

தொகு

இத்தலத்தில் பங்குனி மாதம் 20ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரையான நான்கு நாட்களிலும் சூரிய ஒளி மூலவரின் மேல் விழுகிறது. இந்நிகழ்வு மாலை நேரத்தில் நடக்கிறது.

விழாக்கள்

தொகு
  • சிவராத்திரி
  • மார்கழி திருவாதிரை
  • நவராத்திரி
  • ஆடி வெள்ளிக்கிழமை
  • ஆடி அமாவாசை
  • கார்த்திகை சோமாவாரம்
  • பங்குனி முதல் சோமாவாரம்
  • கடைசி சோமாவாரம்
  • சித்திரை வருடப் பிறப்பு
  • ஐப்பசி அன்னாபிசேகம்

ஆதாரங்கள்

தொகு
  1. பிரம்மா முருகன் வழிபட்ட சிவன் - குமுதம் பக்தி ஸ்பெசல் - 19.05.2016 பக்கம் 88
  2. பிரம்மா முருகன் வழிபட்ட சிவன் - குமுதம் பக்தி ஸ்பெசல் - 19.05.2016 பக்கம் 89