முருந்தா சுரங்கம்
முருந்தா சுரங்கம் (Muruntau mine, uz: Muruntov koni) என்ற தங்கச் சுரங்கம், உசுபெக்கிசுத்தான் நாட்டின் பெரிய தங்கச் சுரங்கமாகும், உலகின் பெரிய தங்கச்சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நாட்டின் ஆட்சிப் பகுதியான, நவோய் பிராந்தியத்தில் உள்ள கிசில்கும் பாலைவனம் உள்ளது. இதற்கு தென்மேற்குப் பகுதியில் முருந்தா மலைகள் உள்ளன. அங்கு இந்த சுரங்கம் இருப்பதால், இப்பெயர் பெற்றது. இச்சுரக்கத்தில் 71,400,000 அவுன்சுகள் (2,020 t) அளவு தங்கம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அமைவிடம் | |
---|---|
நவோய் பிராந்தியம் | |
நாடு | உசுபெக்கிசுத்தான் |
உற்பத்தி | |
உற்பத்திகள் | Gold |
1958 ஆம் ஆண்டு இச்சுரங்கம் கண்டறியப்பட்டது. தங்கம் தோண்டி எடுக்கும் பணி, சூலை 21, 1969 ஆம் ஆண்டு தொடங்கியது. நவோய் சுரங்க நிறுவனம் (Navoi Mining and Metallurgy Combinat) இந்த சுரங்கத்தினை மேலாண்மை செய்கிறது.[1]
பொதுவான தகவல்கள்
தொகுஇந்தோனேசியாவில் உள்ள கிராசுபெர்க்கு(Grasberg) நிறுவனம், உலகின் தங்கத் தயாரிப்பில் முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் நிலையில் 'சராப்சான்' (Zarafshan) தங்கச் சுரங்கமுள்ளது. இந்த தங்க சுரங்கப்பணியால், இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய தங்கம் தோண்டும் சுரங்கத்தினை பரப்பளவில் பெற்றுள்ளது. இதன் நீளம் 3.5 கிமீ, அகலம் - 2.7 கிமீ, ஆழம் - 600 மீ. ஆகும்.
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,53 டன்கள் ஒவ்வொரு வருடமும் எடுக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 61 டன்களாக எடுத்தனர். 2007 ஆம் கணக்கெடுப்பின் படி, தங்க எச்சங்கள் கையிருப்பு 1,750 டன்கள் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Мурунтов олтин кони". Archived from the original on 2017-12-28. பார்க்கப்பட்ட நாள் 2024-04-07.
- ↑ "Месторождение Пеббл (США) по запасам и ресурсам золота превзошло Мурунтау".