முற்றறிவு (Omniscience)என்பது முழுதுணரும் அறிவு, அதாவது, அனைத்தையும் அறியுந் திறனாகும். ஒற்றைக்கடவுட் கோட்பாடுகொண்ட சீக்கியம், ஆபிரகாமிய மதங்கள் ஆகியவற்றில் முற்றறிவு கடவுளின் பண்பாகும். ஆனால் சைனம் (அல்லது சமணம்) போன்ற மதங்களில் அது எந்த ஒரு தனிமனிதனாலும் எட்டக்கூடிய பண்புந் திறனுமாகும்.

புத்தச் சமயத்தில் முற்றறிவுபற்றி அதன் உட்பிரிவுகளைப் பொறுத்துப் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் நிலவுகின்றன.

எண்குணம்

தொகு

முற்றறிவு என்னுமிது தொல்லிந்தியப் பண்பாட்டில் வழக்கமாகக் கூறப்படும் எண்குணம் என்ற தொகையில் அடங்கும் சிறப்பான ஒரு பண்பாகும்.

அருகனெண்குணம் என்ற சமண வகைப்பாட்டில் அது கடையிலாவறிவு எனப்படுகிறது. ஆனால் சிவனெண்குணம் என்ற வகைப்பாட்டில் அது முற்றுமுணர்தல் அல்லது குறைவிலறிவுடைமை எனப்படுகிறது.

மற்ற ஈடான பெயர்கள்
தொகு
தமிழ்ப்பெயர்கள்[1]
முற்றறிவு
கடையிலாவறிவு
முற்றுமுணர்தல்
முற்றுணர்வு
குறைவிலறிவுடைமை
வரம்பில்காட்சி
வடமொழிப்பெயர்கள்[2]
சர்வக்கியானம்
சர்வஞ்ஞத்துவம்
மனனம்
அகண்டாகாரஞானம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Omniscience".
  2. "omniscience".
"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்றறிவு&oldid=3590565" இலிருந்து மீள்விக்கப்பட்டது