நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி

(முற்றிய மார்புச் சளிநோய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) என்பது நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயில் நெடுங்காலமாக இருக்கக்கூடிய ஒரு அழற்சி நோயாகும். பொதுவாக இது நெடுங்கால சுவாச அடைப்பு நோயில் (COPD) ஒன்றாக இருக்கும்.[1] இந்நோயை வரைவிலக்கணப்படுத்தும்போது, அடுத்தடுத்து வரும் இரு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் தொடர்ந்து மூன்று மாத காலமாவது இந்நோய் விடாது இருக்குமாயின் அது நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி என அழைக்கப்படும் .[2] இந்நோயின்போது தொடர்ந்து இருமல் இருப்பதுடன், சளி, சீதச்சவ்வு/சளிச்சவ்வு போன்றன வெளியேறும். இந்நோயில் மூச்சுப் பாதைகள் குறுகலடைந்து அடைப்புகள் ஏற்படும். எம்பைசீமா எனப்படும் நுரையீரல் வீக்கநோயுடன் இந்நோய் இணைந்திருக்கும். இதற்கு முற்றிய நுரையீரல் பாதைத் தடைநோய் (Chronic obstructive lung disease - COLD) என்று பெயர்.
புகைத்தல் இவ்வகை நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகின்றது.

நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புpulmonology
ஐ.சி.டி.-10J42.
ஐ.சி.டி.-9491
ம.பா.தD029481

வெளி இணைப்பு: தொகு

http://en.wikipedia.org/wiki/Chronic_bronchitis

References தொகு

  1. Shaker SB, Dirksen A, Bach KS, Mortensen J (June 2007). "Imaging in chronic obstructive pulmonary disease". COPD 4 (2): 143–61. doi:10.1080/15412550701341277. பப்மெட்:17530508. http://www.informaworld.com/openurl?genre=article&doi=10.1080/15412550701341277&magic=pubmed. 
  2. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் chronic bronchitis