முல்சி தாலுகா
முல்சி தாலுகா (Mulshi taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 15 தாலுக்காக்களில் ஒன்றாகும். முல்சி தாலுகாவில் ஹிஞ்சவடி மற்றும் பிரான்குட் என 2 சிற்றூர்களும் மற்றும் 143 வருவாய் கிராமங்களும் உள்ளது.[1] இத்தாலுகாவின் மேற்கில் ஹவேலி தாலுகாவின் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி உள்ளது. முல்சி தாலுகாவின் ஹிஞ்சவடி பகுதியில் மிகப்பெரிய கணினி தொழில்நுட்ப நகரம் அமைந்துள்ளது.
முல்சி தாலுகா | |
---|---|
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் முல்சி தாலுகாவின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
தலைமையிடம் | Poud |
அரசு | |
• பாராமதி மக்களவைத் தொகுதி | சுப்ரியா சுலே |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,029 km2 (397 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,71,006 |
• அடர்த்தி | 170/km2 (430/sq mi) |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முல்சி வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,71,006 ஆகும். அதில் ஆண்கள் 90053 மற்றும் 80953 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23041 (13.47%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 67.78% ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.58% மற்றும் 4.34% ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 1,53,784 (89.93%), இசுலாமியர் 4,506 (2.63%), பௌத்தர்கள் 11000 (6.43%) மற்றும் பிறர் 1.01% ஆகவுள்ளனர்.[2] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.