முல்ஜி ஜெதா நீரூற்று
முல்ஜி ஜெதா நீரூற்று ( Mulji Jetha Fountain ) என்பது மும்பையைச் சேர்ந்த பருத்தி வியாபாரி ரட்டன்சி முல்ஜி என்பவர் 1889 ஆம் ஆண்டு 15 வயதில் இறந்த தனது ஒரே மகன் தரம்சி முல்ஜியின் மரணத்தையடுத்து நினைவுச் சின்னமாக 1894 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மும்பையின் கோட்டையிலுள்ள ஒரு பாரம்பரிய கட்டிடமாகும்.[1] புத்தகத்தை வைத்திருக்கும் ஒரு சிறுவனின் சிலை படிக்க விரும்பும் மகனைக் குறிக்கிறது.[2] இந்த நீரூற்றை கட்டிடக் கலைஞர் பிரடெரிக் வில்லியம் இசுடீவன்சு வடிவமைத்தார் (இவர் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்தை வடிவமைத்தவர்). இவருக்கு சர் ஜம்சேத்ஜி ஜீஜாபாய் கலைப்பள்ளியின் அப்போதைய முதல்வர் ஜான் கிரிபித்ஸ் உதவினார்.[3]
முல்ஜி ஜெதா நீரூற்று | |
---|---|
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஓவியம் | |
அமைவிடம் | மிண்ட் சௌக் |
ஆள்கூற்றுகள் | 18°56′04″N 72°50′09″E / 18.934320°N 72.835840°E |
பரப்பளவு | கோட்டை |
கட்டப்பட்டது | 1894 |
கட்டிட முறை | இந்தோ சரசனிக் பாணி |
இந்தோ-சரசனிக் பாணியில் கட்டப்பட்ட இந்த சிற்பங்கள் பல இந்திய வடிவங்களைக் கொண்டுள்ளன. சுவர்களில் யானைத் தலைகள் முன்னே தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் துளிகள் விலங்குகளின் தலைகளிலிருந்து வடியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[4] பல தசாப்தங்களாக கண்டுகொள்ளப்படாமலிருந்த பின்னர், 2017 இல் கலா கோடா சங்கம் திரட்டிய நிதியில் நீரூற்று மீட்டெடுக்கப்பட்டு[5][6] மீண்டும் செயல்பட வைக்கப்பட்டது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "On Father's Day, a look at the newly restored Mulji Jheta fountain, built by a father for his son". Architectural Digest India. 17 June 2017.
- ↑ 2.0 2.1 "120-year-old fountain in south Mumbai to open this week". Hindustan Times. 12 June 2017. https://www.hindustantimes.com/mumbai-news/120-year-old-fountain-in-south-mumbai-to-open-this-week/story-OJhr4B1fzL6jRkI4zIKdAP.html. பார்த்த நாள்: 15 June 2022.
- ↑ "On Father's Day, a look at the newly restored Mulji Jheta fountain, built by a father for his son". Architectural Digest India. 17 June 2017.
- ↑ "Mulji Jetha Fountain, Bombay (Mumbai), by Frederick William Stevens (1847-1900)". www.victorianweb.org.
- ↑ "Mumbai: Vandalism threat looms over restored Mulji Jetha Fountain". mid-day. 16 June 2017.
- ↑ "Kala Ghoda to restore famous Mulji Jetha fountain in Mumbai". mid-day. 25 September 2016.