முல்ரி மலைகள்
முல்ரி மலைகள் (Mulri Hills) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள குல்சன் பகுதியில் அமைந்துள்ளது.
கராச்சியில் உள்ள இம்மலைகள் கிர்தர் மலைத்தொடரின் கிளைகள் ஆகும். மலைகளின் மிக உயரமான பகுதியானது வடக்கே சுமார் 528 மீ உயரத்தில் உள்ளது. மலைகள் அனைத்தும் தாவரங்கள் அற்றவையாக பரந்த இடைப்பட்ட சமவெளிகள், வறண்ட ஆற்றுப் படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்களைக் கொண்டுள்ளன.[1]
கராச்சி பல்கலைக்கழகக் குழுவால், கராச்சி பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்னால் உள்ள முல்ரி மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கற்கால மற்றும் பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கு இடைப்பட்ட கற்காலம் சார்ந்த தளங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிந்துவில் செய்யப்பட்ட மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். கடைசியாக வேட்டையாடியவர்கள் தங்கள் பாதையின் ஏராளமான தடயங்களை விட்டுச்சென்றுள்ளனர். மீண்டும் மீண்டும் அவர்கள் முல்ரி மலைகளில் வசித்து வந்துள்ளனர். மேற்பரப்பு ஆய்வுகளின் போது சுமார் இருபது வெவ்வேறு இடங்களில் எரிகல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.[2][3]