முல்லா ஃபசுல்லா

"ரேடியோ முல்லா" அல்லது "முல்லா ரேடியோ" என்ற சிறப்புப் பெயருடைய முல்லா ஃபசுல்லா [2] (Maulana Fazlullah) [3] (பிறப்பு 1974)[4] தடை செய்யப்பட்டுள்ள டெகரிக்-இ-நஃபாசு-இ-சாரியத்-இ-முகமது (TNSM), என்ற பாக்கித்தானிய தீவிரவாத குழுவின் தலைவராவார். இக்குழு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபானுடன் இணைந்து நாட்டில் இஸ்லாமியச் சட்ட முறைமையை வலியச் செயற்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. இவர் சில நேரங்களில் இசுவாட் தலிபானின் தலைவராகவும் குறிப்பிடப்படுகிறார்.[5][6] டெகரிக்-இ-நஃபாசு-இ-சாரியத்-இ-முகமது நிறுவனர் சுஃபி முகமதின் மாப்பிள்ளை ஆவார். தனது தலைவர் ஆக்கிமுல்லா மெகசூது ஐக்கிய அமெரிக்க ஆளில்லா வானூர்தி மூலம் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாக்கித்தானிய தலிபான் இவரை நவம்பர் 7, 2013 அன்று தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.[7]

முல்லா ஃபசுல்லா
பிறப்புஃபசல் அயாத்[1]
மற்ற பெயர்கள்முல்லா ரேடியோ
ரேடியோ முல்லா
அமைப்பு(கள்)டெகரிக்-இ-நஃபாசு-இ-சாரியத்-இ-முகமது (TNSM)
அறியப்படுவதுபாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் தலைவர்
மலாலா யூசப்சையியை தாக்க ஆணையிட்டது

மேற்சான்றுகள்

தொகு
  1. http://indiatoday.intoday.in/story/Window+on+Pak+Press:+Jaswant+created+a+royal+mess-+Dawn/1/57672.html
  2. பாகிஸ்தானின் தலிபானின் புதிய தலைவர் பிபிசி செய்தியிலிருந்து பெயர் எடுக்கப்பட்டுள்ளது
  3. King, Laura (24 February 2009). "Confusion hangs over Pakistan's pact with Taliban". Los Angeles Times. http://www.latimes.com/news/nationworld/world/la-fg-pakistan-swat24-2009feb24,0,4127783.story. பார்த்த நாள்: 24 February 2009. 
  4. Roggio, Bill (7 July 2007) "Swat joins Talibanistan" The Long War Journal Public Multimedia Inc.
  5. "Mullah Radio: Pakistan urges Afghan action against Maulvi Fazlullah". The Express Tribune (The Express Tribune News Network). 2011-10-17. http://tribune.com.pk/story/275813/pakistan-urges-afghan-action-against-taliban-leader/. பார்த்த நாள்: 2011-10-17. 
  6. Swat Taliban chief 'near death'
  7. பாகிஸ்தானின் தலிபானின் புதிய தலைவர் பிபிசி செய்தி, பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2013

மேற்சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லா_ஃபசுல்லா&oldid=3225430" இலிருந்து மீள்விக்கப்பட்டது