முல்லைக்கல் பகவதி கோவில்

கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

முல்லைக்கல் பகவதி கோவில்[1] எனவும், முல்லைக்கல் இராஜராஜேசுவரி கோயில்[2] எனவும் அழைக்கப்படும் முல்லைக்கல் கோவில் (Mullakkal Temple) என்பது ஆலப்புழையில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[3] இக்கோயில் முற்றத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் அனுமதியுண்டு. இந்தக் கோவில் அன்னை ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டதாகும். இந்தக் கோவிலில் ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியமானது. இந்தக் கோவிலை கேரள தேவஸ்வ வாரியம் பராமரித்து வருகிறது.

முல்லைக்கல் பகவதி கோவில்
முல்லைக்கல் பகவதி கோவில் is located in கேரளம்
முல்லைக்கல் பகவதி கோவில்
முல்லைக்கல் பகவதி கோவில்
இராசராசேசுவரி கோவில், முல்லைக்கல், ஆலப்புழை, கேரளா
ஆள்கூறுகள்:9°29′50″N 76°20′35″E / 9.4972°N 76.3431°E / 9.4972; 76.3431
பெயர்
வேறு பெயர்(கள்):முல்லைக்கல் கோவில்
பெயர்:இராசராசேசுவரி கோவில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:ஆலப்புழை
அமைவிடம்:முல்லைக்கல், ஆலப்புழை
சட்டமன்றத் தொகுதி:ஆலப்புழை
மக்களவைத் தொகுதி:ஆலப்புழை
ஏற்றம்:28.32 m (93 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பகவதி அம்மன்
(இராசராசேசுவரி)
சிறப்புத் திருவிழாக்கள்:சிறப்பு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

முல்லைக்கல் பகவதி கோவில், ஆலப்புழை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கே காணப்படும் முல்லைச் செடிகளைப் பராமரிப்பதற்காக அன்னை பகவதி அடிக்கடி இங்கே வந்து காட்சியளித்ததாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் இங்கு சிறப்பு என்ற பெயரில் 41 நாள் நீண்ட உற்சவம் கொண்டாடப்படுகிறது.[4] அவற்றில் கடைசியாக வரும் 12 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்தத் திருவிழா நவம்பர் மாதத்தின் மத்தியில் துவங்கி, டிசம்பர் மாத இறுதி வாரத்தில் முடிவுறும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mullakkal Bhagavathy Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-26.
  2. "Mullaikal Rajarajeswari Temple : Mullaikal Rajarajeswari Mullaikal Rajarajeswari Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-11-26.
  3. "Mullakkal Bhagavathy Temple in Alappuzha, Mullakkal Temple". www.alappuzhaonline.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-26.
  4. "Mullakkal Rajarajeswari temple". Temples of Kerala (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-26.

வெளி இணைப்புகள்

தொகு