முல்லைத்தீவுக் கோட்டை

முல்லைத்தீவுக் கோட்டை (Mullaitivu fort) என்பது முல்லைத்தீவில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை ஆகும். 1715 ஆம் ஆண்டில் ஒல்லாந்தரால் மரத்தாலும் மரவேலிகளாலும் இக்கோட்டை நிறுவப்பட்டது. 1721 ஆம் ஆண்டில் நாற்பக்கல் வடிவில் இக்கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. கண்டி இராச்சியம் செட்டிகளுடன் கொண்டிருந்த சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த்தும் நோக்குடனேயே அமைக்கப்பட்டது.

முல்லைத்தீவுக் கோட்டை
பகுதி: முல்லைத்தீவு
முல்லைத்தீவு, இலங்கை
location of Mullaitivu is located in இலங்கை
location of Mullaitivu
location of Mullaitivu
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
இட வரலாறு
கட்டிய காலம் 1715
கட்டியவர் ஒல்லாந்தர்
சண்டைகள்/போர்கள் சில

பிரித்தானியரால் இக்கோட்டை 1795 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது.[1] 25 ஆகத்து 1803 இல் பண்டார வன்னியனால் இக்கோட்டை இடிக்கப்பட்டது.[2][3] இக்கோட்டையின் தளபதி கப்பித்தான் வொன் டிரிபேர்க் யாழ்கோட்டைக்குத் த்மது கோட்டையை இடம்மாற்றித் தப்பியோடினர்.[4] அதனைத் தொடர்ந்து கப்பித்தான் வொன் டிரிபேர்க்கினால் பண்டார வன்னியனின் படை கச்சிலைமடு எனும் இடத்தில் 31 ஒக்டோபர் 1803 அன்று தோற்கடிக்கப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dutch fort at Mullaitivu". AmazingLanka.com. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  2. Somasundaram, Daya (2014). Scarred Communities: Psychosocial Impact of Man-made and Natural Disasters on Sri Lankan Society. New Delhi: SAGE. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132111689. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
  3. 3.0 3.1 "Pandara Vanniyan memorial place destroyed in Katchilaimadu". 23 April 2010. http://www.lankasrinews.com/view.php?2bIAQKe0d3lmA0ecLBY44a4554Ucd3cYB2dc2Amd3a434OX2e230Mm30. பார்த்த நாள்: 19 November 2014. 
  4. 4.0 4.1 "The Kandy war and the reprisals". Sunday Times. 31 August 1997. http://www.sundaytimes.lk/970831/plus11.html. பார்த்த நாள்: 19 November 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லைத்தீவுக்_கோட்டை&oldid=2455993" இலிருந்து மீள்விக்கப்பட்டது