முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்

முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள முள்ளியவளைப் பிரதேசத்தில் உள்ளது. ஆரம்பத்தில் முள்ளியவளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என அழைக்கப்பட்ட இப்பாடசாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரதுறைப்பற்று பிரதேசபைப்பிரில் முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. இது முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்குத் தெற்கே அமந்துள்ளது. ஆண், பெண் இரு பாலாரும் கல்விகற்கும் இப்பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 9 வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 394 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்விகற்றனர்.