முழக்கம் (காலாண்டிதழ்)

முழக்கம் என்பது 1980 இல் வெளியான ஒரு காலாண்டு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சீர்காழி வட்டம், பூம்புகார்-மேலையூரில் இருந்து வெளிவந்த இலக்கிய இதழ் ஆகும்.

முழக்கம் இதழானது 1980 சனவரியில் துவக்கபட்டது. இதழானது படைய ஆனந்த விகடன் அளவில் 66 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. இதன் முதல் இதழில் புவியரசு, வல்லிக்கண்ணன், சக்திக்கனல், ஆ. தனஞ்செயன், செந்நீ, தீவண்ணன் போன்றவர்களின் கவிதைகள் வெளியாயின. ஒரு விசாரணை என்ற தலைப்பில் ஜெயகாந்தன் குறித்து க. வீரையன் விமர்சனம் செய்யப்பட்டிருந்தார்.

1982இல் முழக்கம் பாரதி மலரை வெளியிட்டது.[1] இலக்கிய விமர்சனத்தில் அதிக அக்கறை காட்டிய முழக்கம் அவ்ப்போது கால தாமதத்துடன் வெளிவந்தது. 1984க்குப் பிறகு வெளிவந்ததாக தெரியவில்லை.

குறிப்புகள்

தொகு
  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 199–204. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழக்கம்_(காலாண்டிதழ்)&oldid=3446271" இலிருந்து மீள்விக்கப்பட்டது