முழுமையான குருதி எண்ணிக்கை
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
முழுமையான குருதி எண்ணிக்கை அல்லது முழுமையான குருதிப் பரிசோதனை என்பது ஒரு மருத்துவரால் அல்லது வேறு மருத்துவ தொழில் நெறிஞர்களால் கேட்கப்படும் நோயாளியின் குருதியிலுள்ள அனைத்து உயிரணுக்கள் பற்றிய தகவல்களும் அடங்கிய அறிக்கையாகும். ஒரு அறிவியல் அறிஞர் அல்லது ஒரு பரிசோதனைக்கூட/ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுனர் தேவையான அனைத்து பரிசோதனைகளையும் செய்து 'முழுமையான குருதி எண்ணிக்கை' எனப்படும் இவ்வறிக்கையை தயாரித்து மருத்துவருக்கோ அல்லது மருத்துவ தொழில் நெறிஞருக்கோ அளிப்பார்.
குருதியில் காணப்படும் மூன்று உயிரணுக்களாவன: செங்குருதியணு, வெண்குருதியணு, குருதிச் சிறுதட்டுக்கள் என்பவையாகும். இவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் (கூடிய அல்லது குறைவான எண்ணிக்கை) பல வகையான நோய்களுக்கான அறிகுறிகளைக் காட்டும். இதனால் இவ்வகைச் சோதனை மருத்துவத்தில் செய்யப்படும் பொதுவான ஒரு சோதனையாக இருப்பதுடன், நோயாளியின் பொது உடல்நலத்தை எடுத்துக்காட்ட உதவியாகவும் இருக்கும்.