முஸ்லிம் குரல் (இதழ்)

முஸ்லிம் குரல்: இந்தியாவில் தமிழ்நாடு சென்னையிலிருந்து 1975ம் ஆண்டு முதல் வெளிந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு

அபிராமம் எஸ். எம். கனி சிஸ்தி நூரி. இவர் "நூருல் இஸ்லாம்", "மறுமலர்ச்சி" ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதி அறிமுகமானவர். "பத்ஹல் இஸ்லாம்" இதழில் துணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்பே "முஸ்லிம் குரல்" மாத இதழை ஆரம்பித்துள்ளார். மார்க்க சொற்பொழிவாளர். மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் வானொலிகளிலும் பேசியிருக்கிறார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். தமிழ்நாடு இஸ்லாமிய நற்பணிச்சபைத் தலைவராகவும், தமிழ்நாடு சுன்னத் வல்ஜமாஅத் ஒருங்கிணைப்புப் பேரவை பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் இதழாளர் சங்கத் தலைவராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பணிக்கூற்று

தொகு

"அஹல சுன்னத் வல்ஜமாஅத் கொள்கை விளக்க இதழ்

உள்ளடக்கம்

தொகு

இவ்விதழ் அரசியல், ஆன்மீகம், சமுதாய சீர்த்திருத்தம், வரதட்சணை ஒழிப்பு போன்ற பணிகளை முன்னெடுப்பதில் தீவிரமாக இருந்துவந்தது. மேலும், உடனுக்குடன் செய்தி வெளியிட்டும் வருகின்றது. இதனால் இருமுறை மானஇழப்பு வழக்குகளை சந்தித்துமுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்_குரல்_(இதழ்)&oldid=727095" இலிருந்து மீள்விக்கப்பட்டது