முஸ்லிம் முரசு
முஸ்லிம் முரசு இந்தியாவின், தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1948ல் வெளிவந்த மாத இதழ் இதுவாகும். அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய இதழாக இது விளங்குகின்றது.[1][1]
ஆசிரியர்
தொகுஇவ்விதழின் ஆரம்ப ஆசிரியர் வ. மி. சம்சுதீன். பின்பு காலத்துக்குக் காலம் ஆசிரியர்கள் மாறியுள்ளனர். இந்த இதழை அப்துர் ரஹீம் (நாச்சியார் கோவில்) நிறுவினார்.
பணிக்கூற்று
தொகுஆரம்ப இதழ்களில் இதன் பணிக்கூற்று பின்வருமாறு அமைந்திருந்தது. "அன்பும் இன்பமும் அறிவும் ஆற்றலும் பண்பும் புகழும் பொலிந்து விளங்க முரசு முழங்கவே".
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழ் பல்துறை அம்சங்களைக் கொண்டு வாசகர்களைக் கவரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கவிதை, சிறுகதை, நெடுங்கதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், முஸ்லிம் உலக செய்திகள், செய்தி ஆய்வுகள் தமிழ் நாட்டு முஸ்லிம் செய்திகள், ஆய்வுகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது.