முஸ்லிம் லீக் (1937 சிற்றிதழ்)

முஸ்லிம் லீக் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1937ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். இதன் முகப்பட்டையில் 786 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாக இசுலாமியர்கள் 786 எனும் இலக்கத்தை ஒரு அடையாளமாக கொண்டிருப்பர். அநேகமாக 20ம் நூற்றாண்டுகளின் இறுதிக்காலங்கள் வரை இலங்கை, இந்தியா முஸ்லிம்களிடம் இவ்வழக்கம் காணப்பட்டது.

ஆசிரியர்

தொகு
  • கா. ப. முகம்மது இஸ்மாயில்

பணிக்கூற்று

தொகு
  • தேசிய பத்திரிகை

சந்தா

தொகு

மார்ச் 1 1938ம் ஆண்டு இதழில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. "பணம் அனுப்ப சக்தி இல்லாதவர்களும் இருக்கலாம். அவர்கள் நம்மிடம் கொஞ்சமும் வெட்கப்பட வேண்டியதில்லை. அவர்கள் நமக்கு உறை அஞ்சலில் தகவல் தெரிவித்தால் நாம் சக்தியில்லாதவர்கள் ரிஜிஸ்தரில் பதிவுசெய்து கொண்டு, பத்திரிகை அனுப்பி வைப்போம்."