முஸ்லிம் (1977 இலங்கைச் சிற்றிதழ்)

முஸ்லிம் இலங்கை பாணந்துரையிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். முஸ்லிம் என்ற பெயரில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பல சிற்றிதழ்களும், இதழ்களும் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்

தொகு
  • சேக் முஹம்மத் ஹசன்.

சிறப்பு

தொகு

இவ்விதழ் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்தது.

பணிக்கூற்று

தொகு
  • குடும்ப சஞ்சிகை

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய சமூகப் பிரச்சினைகளுக்குரிய விளக்கங்களும், இசுலாமிய இலக்கிய வடிவங்களும் இச்சிற்றிதழில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இலங்கை இசுலாமிய பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் திட்டங்களை இவ்விதழ் மேற்கொண்டிருந்தது.