மூங்கில் மற்றும் பிரம்பு மேம்பட்ட ஆராய்ச்சி மையம்
மூங்கில் மற்றும் பிரம்பு மேம்பட்ட ஆராய்ச்சி மையம் (Advanced Research Centre for Bamboo and Rattan)[1][2] என்பது மிசோரத்தில் ஐசவாலில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படும் மேம்பட்ட ஆராய்ச்சி மையமாகும். இது 2004ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
வகை | கல்வி & ஆய்வு |
---|---|
உருவாக்கம் | 2004 |
Parent institution | இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு |
அமைவிடம் | ஐசுவால் , , |
வளாகம் | நகரம் |
Acronym | ARCBR |
இணையதளம் | icfre.org |
ஆராய்ச்சி திட்டங்கள்
தொகுஇந்நிறுவனம் மூங்கில் மற்றும் பிரம்பிற்கான மேம்பட்ட ஆராய்ச்சியினை மேற்கொள்ளும் மையமாகும். நவம்பர் 29, 2004 அன்று பெத்லஹேம் வெங்த்லாங்கில் திறந்து வைக்கப்பட்ட இந்த மையம், குறிப்பாக வடகிழக்கு மக்களுக்கு மூங்கில் மற்றும் பிரம்பு சார்ந்துள்ள வாழ்விற்கு முதன்மையானது.
- மூங்கில் மற்றும் பிரம்பு மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முக்கிய ஆராய்ச்சி பிரிவுகள்
- மேலாண்மை மற்றும் நிலையான பயன்பாடு
- சாகுபடி நடைமுறைகள்
- பெரும் மற்றும் நுண்மப் பயிர்ப் பெருக்கம், பன்முகத்தன்மை செறிவூட்டல்
- மரபணு மேம்பாடு மற்றும் நம்பிக்கைக்குரிய மரபணு வளங்களின் பாதுகாப்பு
- தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பண்ணைத் நுட்பங்களைத் தரப்படுத்துதல், சான்றிதழ் வழங்கல்
- மதிப்புக் கூட்டல், உண்ணக்கூடிய மூங்கில் பகுதிச் செயலாக்கம்,
- மூங்கில் கலவைகள் உள்ளிட்ட தயாரிப்பு மேம்பாடு
- மூங்கில் சார்ந்த கருவிகள் / மூங்கில் வேலை செய்வதற்கான இயந்திரங்கள்
- மூங்கில் அடிப்படையிலான அறிவு மற்றும் தொழில்நுட்பங்களைப் பயனாளர்களுக்கு விரிவாக்குதல்.
புவியியல் அதிகார வரம்பு
தொகுஅருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் மூங்கில் மற்றும் பிரம்பு தொடர்பான ஆராய்ச்சி தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, அசாம் மாநிலங்களின் மிசோரம், திரிபுரா மற்றும் பராக் பள்ளத்தாக்கில் ஆர்.எஃப்.ஆர்.ஐயின் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://icfre.org/index.php?linkid=sublnk450352&link=1
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.