ஆரையூர் அருள்
மூ. அருளம்பலம் (பிறப்பு: செப்ரெம்பர் 19, 1949) என்பவர் ஆரையூர் அருள்[1] என்ற பெயரில் எழுதி வரும் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளரும், கலைஞரும் ஆவார். 1960 முதல் கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற பல துறைகளில் இவரது ஆக்கங்களும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.[2]
மூ. அருளம்பலம் | |
---|---|
பிறப்பு | மூத்ததம்பி அருளம்பலம் செப்டம்பர் 19, 1949 ஆரையம்பதி, மட்டக்களப்பு, இலங்கை |
இருப்பிடம் | ஆரையம்பதி |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | ஆரையூர் அருள் |
கல்வி | மட்டக்களப்பு சிவாநந்தா தேசியப் பாடசாலை |
பணி | ஆசிரியர், பாடசாலை அதிபர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர், கலைஞர் |
சமயம் | சைவம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஅருளம்பலம் தனது ஆரம்பக் கல்வியை ஆரைப்பற்றை இ.கி.மி.த.க.பாடசாலையிலும், உயர்கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா தேசியப் பாடசாலையிலும் கற்றார். ஆசிரியராகப் பயிற்சி பெற்று முதலாம் தர இலங்கை அதிபராகப் பணியாற்றினார்.[2] இவரது எழுத்துகள் இலங்கையின் பிரபலமான பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகின. பல ஒலிப்பேழைகளுக்கு வரியெழுதி வெளியிட்டார்.[2] பக்தி இலக்கிய வகையைச் சேர்ந்த இறையின்பப் பாவாரம் என்ற 742 பக்கங்களைக் கொண்ட பெருங் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டார். மொத்தம் 3010 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.[3][4]
எழுதிய நூல்கள்
தொகு- பேச்சியம்பாள் பாடல்கள் (2001)
- மட்/புதுக்குடியிருப்பு கற்பரசி கண்ணகி அம்பாள் பாடல்கள் (2002)
- புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல்கள் (2002)
- கல்லடி - உப்போடை - நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்பாள் பாடல்கள் (2010)
- ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் சிதானந்த தபோவனம் ஸ்தாபகர் ஓங்காரானந்த சரஸ்வதி சரிதம் (2010)
- பேச்சியம்பாளின் அவதாரமும் ஆலயமும் (2012)
- “கிராமத்து உள்ளங்கள்” நாட்டார் இலக்கியம் (2013)[5]
- “இறையின்பப் பாவாரம்” (பக்தியிலக்கியம், 2016)[3]
விருதுகள்
தொகு- ‘கூத்துக்கலைஞன்‘ (மண்முனைப் பற்று சாகித்திய விழா, 1997)[2]
- ‘நாட்டுக்கூத்துக் கலைஞன்‘ (ஜோசப் பரராஜசிங்கம் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் வழங்கியது, 2002).[2]
- ‘கீர்த்தி சிறி‘ தேசிய விருது (முன்னாள் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி வழங்கியது, 2009)[2]
- ‘கலைஞானி‘ (ஆரையம்பதி மகாவித்தியாலய நட்புறவுக் குழு வழங்கியது, 2009)[2]
- ‘முதலமைச்சர் விருது‘ (கிழக்கு மாகாணசபை கிராமிய கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக வழங்கியது, 2010)[6]
- ‘கலாபூசணம்‘ தேசிய விருது இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் வழங்கியது, 2010)[2]
- ‘இறைஞான தேசிகர்‘ (இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி கபாலீசுவரானந்தா வழங்கியது, 2011)[2]
- ‘சாதனையாளர்‘ விருது (ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பு வழங்கியது, 2012)[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்…. (05)[தொடர்பிழந்த இணைப்பு], லெ. முருகபூபதி, சூலை 8, 2018
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "ஆரையூர் அருள்". Archived from the original on 2021-10-22. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
- ↑ 3.0 3.1 இறையின்ப பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம் பரணிடப்பட்டது 2020-06-19 at the வந்தவழி இயந்திரம், தமிழ்மணி அகளங்கன், ஆகத்து 20, 2019
- ↑ ஆரையூர் அருள் அவர்களின் இறையின்பப் பாவாரம் நுால் வெளியீட்டு விழா பரணிடப்பட்டது 2018-01-20 at the வந்தவழி இயந்திரம், தமிழ்சிஎன்என், சனவரி 17, 2017
- ↑ நூலறிமுகம், அட்டாளச்சேனை எஸ். எல். மன்சூர்
- ↑ தமிழ் இலக்கிய விழா 2010