மூத்தவிலங்கு

கரிமப் பொருட்களுக்கு உணவளிக்கும் ஒற்றை செல் யூகாரியோடிக் உயிரினங்கள்
(மூத்தவிலங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மூத்தவிலங்கு அல்லது முதலுயிரி (Protozoa) எனப்படுவது ஆங்கிலத்தில் புரோட்டோசோவா என அறியப்படுகிறது. இந்த சொல்லானது கிரேக்க மொழியில் இருந்து வந்ததாகும் (புரோடான் - "முதல்" ; சோஆ - "உயிர்கள்" அல்லது "விலங்குகள்"). இது நகரக்கூடிய நுண் மெய்க்கருவுயிரிகளாகும். இவை ஒட்டுண்ணிகளாவும், தனித்தும் வாழக்கூடியவை. இவை மைக்ராஸ்கோப் எனும் உருப்பெருக்காடி மூலம் மட்டுமே காணக்கூடிய மிக நுண்ணிய உயிரினமாகும். இது ஒரு ஒருசெல் உயிராகும். குளம் அல்லது குட்டையிலிருந்து எடுக்கப்படும் ஒரு கரண்டி நீரில் பல இலட்சக்கணக்கான முதலுயிரிகள் உள்ளன.

என்புமச்சைக் கலத்தில் காணப்படும் ஒருவகை மூத்த விலங்கு லீசுமானியா டொனோவனி (Leishmania donovani)

பண்புகள்

தொகு

இவை நீண்டு புழுக்களைப்போலவும், சிறு எலும்பில்லா உயிரிகளைப்போலவும் காணப்படுகின்றன. இவற்றின் நீளம் 50-60μm லிருந்து 1mm வரை வேறுபடக்கூடியது. இவைகளில் சிறந்த உதாரணம் குடற்புழுக்கள், அமீபா, பேரமீசியம் ஆகியவையாகும். இவற்றை நுண்ணோக்கியால் தெளிவாகக் காண இயலும். இவை பெரும்பாலும் ஒட்டுண்ணிகளாக வாழ்பவை. இவை விலங்கு, தாவரம், செத்த உயிரிகளிலிருந்து சாறையுறிஞ்சி வாழ்கின்றன. இவைகளில் சில பூஞ்சைகளை கொன்றும் வாழ்கின்றன. இவை நீர் நிலைகளில் மிகுதியாகவும், மண்ணிலும் காணப்படுகின்றன. இஃது ஒரணு உயிரினமாயினும் மற்ற உயிரினங்களைப்போன்றே இவைகளும் வேண்டிய உணவைத் தேடிப் பெறுகின்றன. உண்ணும் உணவைச் செரிக்கின்றன. மற்ற உயிரினங்களைப்போன்றே இவைகளும் சுவாசித்தே வாழ்கின்றன. உண்ட உணவிலிருந்து வெளிப்படும் கழிவுப்பொருட்களை அவ்வப்போது வெளியேற்றுகின்றன. இனப்பெருக்கமும் செய்துகொள்கின்றன. புரோட்டோசோவாக்கள் மிக நுண்ணிய உயிரினமாக இருந்த போதிலும் இவற்றில் சிலவற்றிற்கு உடல்மேல் ஓடு உண்டு. இவை இறப்பதால் இதன் மேலுள்ள ஓடுகள் இலட்சக்கணக்காகத் தங்கிவிடுகின்றன. இவ்வோடுகள் ஒன்று சேர்ந்து கடலடியில் சீமைச் சுண்ணாம்புத் திட்டுகள் உருவாகின்றன.

வாழ்க்கைமுறை

தொகு

இவற்றுள் சில சுயேட்சையான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன. இன்னும் சில வகைகள் மற்ற உயிரினங்களோடு ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடத்துகின்றான. தங்களுக்கு வேண்டிய உணவை தாங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரினங்களிடமிருந்தே உறிஞ்சிப் பெறுகின்றன. முதலுயிரிகள் பெரும்பாலும் நீரிலும் ஈரமான இடங்களிலுமே வாழ்கின்றன. இவை சில நேரங்களில் சில விலங்கினங்களுக்கு உணவாவதும் உண்டு.

இனப்பெருக்கம்

தொகு

இவற்றின் இனப்பெருக்கம் விந்தையானதாகும். இவை ஒவ்வோன்றும் ஒன்று அல்லது இரண்டாகப் பிரியும். பிரியும் ஒவ்வொரு பகுதியும் ஒரு முதலுயிரியாக விரைந்து மாறி வளரும். இவ்வாறு இதன் இனப்பெருக்கம் நிகழ்கிறது.

வகைகள்

தொகு

முதலுயிரிகள் அனைத்தும் ஒரே வகையானவை அல்ல. அவை பலவகைப்படும். உலகில் சுமார் 25000 வகை முதலுயிரிகளுக்கு மேல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் அறிவியலறிஞர்கள் முதலுயிரிகளை இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர். ஒரு பிரிவு 'ரிசோபோடா' என்றும் மற்றொன்று 'இன்ஃபுசோரியா' என்றும் அழைக்கப்படுகிறது. ரிசோபோடோவுக்குப் பொய்க்கால்கள் உண்டு. இவை எப்பக்கமும் நீளும். உடலுக்குள் இழுத்துக் கொள்ளவும் இயலும். இவற்றிற்குக் கவசம் போல கூடு உண்டு.

இன்ஃபுசோரியா மிகவும் சிக்கலான அமைப்புடையது. இவற்றிற்கு நுண்மயிர்கள் உண்டு. இவை நீரில் நகரும்போது இம்மயிர்கள் துடுப்பு போலப் பயன்படுகின்றன.

நோய்கள்

தொகு

மனிதனுக்கு இவை பல நோய்களை உண்டாக்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

ஆடு,மாடு போன்ற கால்நடைகளுக்கும் பிற விலங்குகளுக்கும் கூட சில வகை நோய்களை முதலுயிரிகள் தோற்றுவிக்கின்றன.

உசாத்துணை

தொகு
  • இளையர் அறிவியல் களஞ்சியம், மணவை பதிப்பக வெளியீடு. -1995

மேற்குறிப்புகள்

தொகு
  • Protozoa at Dorland's Medical Dictionary Protozoa at Dorland's Medical Dictionary
  • "Protozoa". MicrobeWorld. American Society for Chemistry. 2006. Archived from the original on 19 May 2008. Retrieved 15 June 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூத்தவிலங்கு&oldid=2807610" இலிருந்து மீள்விக்கப்பட்டது