மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்

(மூன்றாம் ஆங்கில-மைசூர்ப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மூன்றாவது ஆங்கில மைசூர் போர் (Third Anglo-Mysore War) 1789–92 காலகட்டத்தில் தென் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு போர். திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் பேரரசு மற்றும் பிரித்தானிய கிழக்கு இந்தியா நிறுவனத்தின் தலைமையிலான கூட்டணி இடையே நடைபெற்றது. மைசூருக்கு எதிரான கூட்டணியில் மராட்டியப் பேரரசும் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினை தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது. மேலும் அதற்கு பணயமாக திப்பு சுல்தான் தனது இரு மகன்களை ஆங்கில அரசுக்கு வழங்க வேண்டியிருந்தது. பத்து வயதான அப்துல் காலிக் சுல்தான், எட்டு வயதான மொய்சுதீன் சுல்தான் ஆகிய இருவரும் பிணையாகக் கொடுக்கப்பட்டனர்.[1]

மூன்றாவது ஆங்கில-மைசூர் போர்
Third Anglo-Mysore War
ஆங்கில-மைசூர் போர்கள் பகுதி

போர் நடந்த இடங்களின் வரைபடம்
நாள் 1789–1792
இடம் இந்திய உபகண்டம்
ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்பாடு
நிலப்பகுதி
மாற்றங்கள்
மைசூர் தனது ஆளுகைக்குட்பட்ட அரைவாசிப் பகுதியை இழந்தது.
பிரிவினர்
மைசூர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்

மராட்டியப் பேரரசு
ஐதராபாத்
திருவிதாங்கூர்திருவிதாங்கூர்

தளபதிகள், தலைவர்கள்
திப்பு சுல்தான் வில்லியம் மெடோஸ்
சார்ல்ஸ் கோர்னவலிசு
பரசுராம் பாகு
ஹறி பண்ட்
டெய்ஜ் வண்ட்
காரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல்.
காரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல் - இராபர்ட்டு ஓம் வரைந்த ஓவியம். ஆண்டு. 1793

இதனையும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. எஸ். ராமகிருஷ்ணன் (திசம்பர், 2012). எனது இந்தியா. விகடன் பிரசுரம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8476-482-6.