மூன்றாம் விஜயபாகு

மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) தம்பதெனியாவைத் தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன். தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்தான்.

மாகோன் இராஜரட்டையை ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையில் உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் "பூஜாவலிய" கூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என "சூளவம்சம்" கூறுகின்றது.

பொலன்னறுவை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளான போது, பெளத்த பிக்குகள் கொத்மலையில் புத்தரின் புனித பொருட்களை மறைத்து வைத்திருந்தார்கள். மூன்றாம் விஜயபாகு மன்னனே பெலிகலையில் தலதா மாளிகை அமைப்பித்து கொத்மலை இருந்த புனித சின்னங்களை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தான் .

இவனது சேவைகளாவன,

  • களனி விகாரையை புனர்நிர்மாணம் செய்தமை.
  • தம்பதெனியவில் விஜயசுந்தராமய விகாரையை கட்டியமை.
  • உபசம்பதா சடங்கை நிகழ்தியமை.

உசாத்துணை

தொகு
  • க. தங்கேஸ்வரி (ப - 94,95) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_விஜயபாகு&oldid=4051200" இலிருந்து மீள்விக்கப்பட்டது