மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு
மூலக்கூற்று உயிரியலின் மையகோட்பாடு (Central dogma of molecular biology) என்பது மூலக்கூற்று உயிரியலில் பிரிக்க முடியாத நிகழ்வு. முதலில் இதை வழிமொழிந்தவர் பிரான்சிஸ் கிரிக் என்ற ஆய்வாளர், டி.என்.ஏ (மரபு இழை) ஒரு ஈரிழை என உறுதிப்படுத்தியவர். மரபு இழையில் இருந்து மரபு செய்திகள் கடத்தப்படுவதை விரிவாக விளக்கும் கோட்பாடாகும்.
மரபு இழை படியெடுத்தல் (DNA Replication)
தொகுமரபு இழையில் இருந்து, புதிய மரபு இழையாக மாறுதல். இதற்குப் பல கோட்பாடுகள் இருந்தாலும் அரை -பழைமை (semi-conservative) முறை நிரூபிக்கப்பட்டு பலராலும் ஏற்றுகொள்ளப்பட்ட முறையாகும்.
ஆர்.என்.ஏ படியெடுப்பு (Transcription)
தொகுடி.என்.ஏ யில் இருந்து ஆர்.என்.ஏ யாக மாற்றப்படும் செயல்முறை. இம்மாற்றத்தின் போது மரபு ஈரிழையின் (டி.என்.எ ) 5' (முனை அல்லது தொடர்) ப்ரீம் இருந்து 3' (முனை அல்லது தொடர்) ப்ரீம் நோக்கி ஆர்.என்.ஏ நகலாக்கப்படும். இவ்வினையின் பொழுது ஆர்.என்.ஏ பாலிமரசு ௨ (II) என்ற நொதி டி.என்.ஏ யிலிருந்து செய்திகாவும் (messenger) ஆர்.என்.ஏ (எம்.ஆர்.என்.ஏ) உருவாதலில் முக்கிய பங்காற்றுகின்றது. இதுவே ஆர்.என்.ஏ. படியெடுப்பு எனப்படுகின்றது.
மேலும் சிறிய (snRNA), குறிய (microRNAs) ஆர்.என்.எ. உற்பத்தி செய்வதற்கு பயன்படுகிறது, இவையிரண்டும் ( சிறிய (snRNA), குறிய (microRNAs) ஆர்.என்.எ.) வளர்ச்சி நிலைகளில் (developmental regulation) ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக குறிய ஆர்.என்.எ பற்றி தற்பொழுது மிகையான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஏனெனில் குறிய ஆர்.என்.எ வில் சிறு அளவில் மாற்றம் ஏற்பட்டால் பல இடர்களை ஏற்படுத்துகின்றன.
புரத உற்பத்தி (Translation)
தொகுசெய்திகாவும் ஆர்.என்.ஏ யிலிருந்து (mRNA) புரதம் உருவாக்கப்படல் மொழிபெயர்ப்பு எனப்படும். இவ்நிகழ்வின்போது செய்திகாவும் ஆர்.என்.ஏ யிலிருக்கும் முக்குறியத்திற்கு (triplet codon) எதிரான, டி.ஆர்.என்.ஏ யில் இருக்கும் (tRNA)களை எதிர் முக்குறியங்களைப் (anticodon) பயன்படுத்தி அமினோ அமிலம் படிப்படியாகச் சேர்க்கப்பட்டு பல-இணைவுகளாக (poly-pepetide) மாற்றப்பட்டு முழுப் புரதமாக உருவாக்கப்படும். குறிப்பிட்ட அமினோ அமிலத்திற்குத் தனியான முக்குறியங்களும் (ஒரே அமினோஅமிலத்திற்கு மூன்று அல்லது நான்கு முக்குறியங்கள் இருக்கும்), அதற்குரிய எதிர் முக்குறியங்களும் அமையப் பெற்றுள்ளன. டி அமினோ அசைல் சிந்தடேசு (t-aminoaceyl sunthatase ) என்ற நொதியும் மற்றும் பல காரணிகளும் (initiation, elongation factors) முக்கிய பங்காற்றுகிறது.
பின் படியெடுப்பு (reverse transcription)
தொகுபல ஆண்டுகளாக மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் மீண்டு மாற்றமுடியாது எனவும், ஒருமுறை டி.என்.ஏ. ஆனது ஆர்.என்.ஏ யாக மாற்றப்பட்டால் அவை பின்னோக்கி செல்ல முடியாது எனவும் நம்பப்பட்டது. பிற்காலத்தில் வைரஸ்கள் (RNA viruses) ரிவர்சு டிரன்க்ரிப்டசு நொதியால் ஆர்.என்.ஏ வில் இருந்து டி.என்.ஏ வுக்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வு ரெட்ரோ வைரஸ் மற்றும் பார ரெட்ரோ விருஸ்கலில் நடைபெறுகின்றன. இக்கண்டுபிடுப்புகள் மூலக்கூற்று உயிரியலில் ஒரு புரட்சி ஏற்படுத்தின. இதன் மூலம் ஆர்.என்.ஏ யிலிருந்து மறுபடி டி.என்.ஏ செயற்கையாகவும் பெறப்பட்டது. இவாறு உருவாகும் டி.என்.ஏ சி.டி.என்.ஏ (cDNA) எனப்படுகின்றது [1].
பிரியன்ஸ் (prions)
தொகுஇவைகள் ஒரு புரதம். புரத அமைப்புகளில் (secondary structure and protein folding) ஏற்படும் மாற்றங்களினால் நோயைத் தூண்டுகின்றன. ஆய்வாளர் ஸ்டான்லி புருசினர் (Stanley B. Prusiner ) பல ஆய்வு கட்டுரைகளையும், அதற்கான நோபல் பொற்கிழியும் பெற்றார்.