மூலதனப் பண்டம்

பொருளியலில் மூலதனத்தைப் பெருக்குவதில் அல்லது பொருட்களையோ சேவைகளையோ உற்பத்தி செய்வதில் பயன்படும் பண்டங்கள் மூலதனப்பண்டங்கள்(Capital good) எனப்படும். உற்பத்திச் செயற்பாட்டுக்குப் பயன்படும் மூன்று வகைப் பண்டங்களில் இதுவும் ஒன்று. நிலம், உழைப்பு என்பன ஏனைய இரண்டும் ஆகும். இம்மூன்றையும் ஒருங்கே முதன்மை உற்பத்திக் காரணிகள் என்றும் குறிப்பிடுவது உண்டு. இந்த வகைபிரிப்பு முறை செந்நெறிப் பொருளியற் காலத்தில் உருவாகி இன்றுவரை முக்கியமான வகைப்பாடாக இருந்து வருகிறது.

ஒரு சமூகத்தில், உற்பத்திச் சாதனங்களில் முதலீடு செய்யக்கூடிய வகையில் செல்வத்தைச் சேமிப்பதன் மூலம் மூலதனப் பண்டங்கள் பெறப்படுகின்றன. பொருளியலில், மூலதனப் பண்டங்களை தொடுபுலனாகுபவை (tangible) எனக் கருதலாம். இவை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பிற பண்டங்களையும், சேவைகளையும் உருவாக்கப் பயன்படுகின்றன. விற்பனைக்காகப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள், கணினிகள் போன்றவை மூலதனப் பண்டங்கள். தனிப்பட்டவர்களோ, குடும்பத்தினரோ, நிறுவனங்களோ, அரசுகளோ மூலதனப் பண்டங்களின் உரிமையாளர்களாக இருக்கலாம்.

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலதனப்_பண்டம்&oldid=2539891" இலிருந்து மீள்விக்கப்பட்டது