மூலிகை மருத்துவம்

இயற்கையாகக் கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இம்மருத்துவமுறையில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. சீன மரபு வழி மருத்துவத்திலிருந்தை,ஆர்ட்டெமிசியா அன்னுவா (Artemisia annua) என்ற தாவரயினத்திலிருந்து, கொசுவினால் பரவும் மலேரியாவுக்கு மருந்து கண்டறியப்பட்டது. இதற்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "This Ancient Chinese Remedy Helped Win the Nobel Prize". Time (in ஆங்கிலம்). Archived from the original on 3 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
  2. Su, Xin-zhuan; Miller, Louis H. (November 2015). "The discovery of artemisinin and Nobel Prize in Physiology or Medicine". Science China Life Sciences 58 (11): 1175–1179. doi:10.1007/s11427-015-4948-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1674-7305. பப்மெட்:26481135. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலிகை_மருத்துவம்&oldid=3952124" இலிருந்து மீள்விக்கப்பட்டது