மூலைவிட்ட பூச்சிகள்

விட்டில் பூச்சிகள்
செவிப் பூரான்கள்

புதைப்படிவ காலம்:பிந்தைய முப்படிவுக் காலம் முதல் அண்மை வரை
பெண் விட்டில் பூச்சி, Forficula auricularia
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
தோற்சிறகிகள்

உள்வரிசைகள்
  • தொல்தோற்சிறகிகள்
  • முழுத்தோற்சிறகிகள்
  • புதுத் தோற்சிறகிகள்
வேறு பெயர்கள்
  • ஐபிலேகாப்டெரா
  • Euplexoptera
  • Forficulida

விட்டில் பூச்சிகள் (Earwigs) தோற்சிறகிகள் எனும் பூச்சி வரிசையைச் சேர்ந்தவையாகும். இவற்றில் ஏறத்தாழ 2,000 இனங்கள் உள்ளன.[1] சிறுபூச்சி வரிசைகளில் ஒன்றாகிய இவை 12 குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. விட்டில் பூச்சிகள் தனிப்பான்மையுள்ள வால்சிதில்களையும் வயிற்றில் ஓரிணைக் கொடுக்குகளையும் கீழே மடிந்த படலவகைச் சிறகுகளையும் கொண்டுள்ளன; எனவே இவை அறிவியலில் தோற்சிறகிகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்ரின் கொடுக்கில்லாத சில குழுக்கள் பாலூட்டிகளில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. இவை அண்டார்ட்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன.

இவை இரவில் முனைவாக இயங்குபவை. பகலில் ஈரமான இண்டு இடுக்குகளில் மறைந்திருக்கின்றன. இவை பல்வேறு பூச்சிகளையும் பயிர்களையும் உண்கின்றன. இவை பயிர்த்தாள்களையும் பூக்களையும் பல்வேறு பயிர்வகைகலையும் உண்டு அழிக்கின்றன.

இவை முதிரும் முன்பாக ஐந்துமுறை தோலுரிக்கின்றன. இவற்ரின் பல இனங்களில் பூச்சிகளில் இல்லாத தாய்க்கவனிப்பு அமைந்துள்ளது. இவற்றின் பெண்பூச்சிகள் பொரித்த பிறகும் முட்டைகளைப் போலவே இளவுயியிகளையும் இரண்டாம் தோலுரிப்பு வரையில் காப்பாற்றுகின்றன. இளவுயிரிகள் தோலுரிக்கும்போது பாலியல் வெறூபாடு, அதாவது கொடுக்கு வடிவ வேறுபாடு உருவாகத் தொடங்குகிறது.

இவற்றில் சில மறைந்துவிட்ட உள்வரிசைகளாகிய தொல்தோற்சிறகிகளிலும் முழுத்தோற்சிறகிகளிலும் புதைபடிவ எச்சங்கள் அமைகின்றன. தொல்தோற்சிறகிகள் பிந்தைய முப்படிவுக் காலத்திலும் முழுத்தோற்சிறகிகள் நடு முப்படிவுக் காலத்திலம் அமைந்துள்ளன. பூச்சிகளின் பல பிற வரிசைகள் இதிலிருந்து தோன்றியனவாக கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். என்றாலும், பனி மூட்டைப் பூச்சிகள் இதில் இருந்து தோன்றியிருக்க உறுதியான வாய்ப்புள்ளது.

புறவடிவவியல்

தொகு
ஆண் & பெண் விட்டில் பூச்சிகள்
விட்டில் பூச்சிகள் புறவடிவவியல்

பரவல்

தொகு
மேற்குத் தொடர்ச்சிமலைகளில் விட்டில் பூச்சி (செவிப் பூரான்)

இவை பரவலாக தென் அமெரிக்காவிலும் ஐரோப்பாசியாவிலும் காணப்படுகின்றன. ஐரோப்ப்பாவில் இருந்து இவை வட அமெரிக்காவுக்கு 1907 இல் பரவலாயின; என்றாலும் இவை தெற்கு, தென்மேற்கு அமெரிக்காவிலேயே பரவலாகக் காணப்படுகின்றன.[2]:739ஐக்கிய அமெரிக்காவுக்கு வடக்கே காணப்படும் ஒரே இனமாக தோரு அக்குலீட்டம் (Doru aculeatum) எனும் முள்ளெலும்புவால் விட்டில் பூச்சி மட்டும் அமைகிறது.[3] :144 வகையினம் வடக்கில் கனடாவில் தெற்கு ஒண்டாரியோ சதுப்புநிலங்களில் முளைக்கும் தாவர இலைகளில் ஒளிந்து வாழ்கின்றன. என்றாலும், மற்ர குடும்பங்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. இவற்றில் போர்ப்பிகுலிடே (Forficulidae) ( தோரு (Doru) பேரினம், போர்ப்பிகுலா ஆகியன ), இசுபாஞ்சிபோரிடே, அனிசோலாபிடிடே (Anisolabididae), இலாபிடூரிடே (Labiduridae) ஆகிய குடும்பங்கள் அடங்கும்.[4]

சில குளிர்ந்த காலநிலை பனிக்காலத்தில் வாழ்கின்றன. இவை தோட்டங்களிலும் காடுகளிலும் வயல்களிலும் உள்ள இறுக்கமான பிளவுகளில் வாழ்கின்றன.[2]:739[5] 1,800 இனங்களில், 25 வட அமெரிக்காவிலும் 45 ஐரோப்ப்பாவிலும் (இவற்றில் 7 பெரும்பிரித்தானியாவில்), 60 ஆத்திரேலியாவிலும் வாழ்கின்றன.[6]

நடத்தை

தொகு

பெரும்பாலானவை இரவில் வாழ்பவை. இவை சிறு பிளவுகளிலும் சிறுசிதிலங்களிலும் பெயந்து விழுந்துவிட்ட பட்டைகளிலும் கட்டைகளிலும் ஒதுங்குகின்றன. இவை குருடுகளாகும். குகைகளிலும் முழைஞ்சுகளிலும் கூட வாழ்கின்றன; இவைஅவாயிலும் தென் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. உணவு பல்வேறு உயிருள்ள அல்லது இறந்துபட்ட பயிர்கள் அல்லது விலங்குணவாக அமைகிறது.[7] கொன்றுண்ணிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்துகொள்ள இவை மஞ்சள் நிர தீநாற்ற நீர்மத்தை தாரையாகப் பின்பக்கத்தில் அமைந்த மூன்றாம், நான்காம் கண்டங்களில் உள்ள வாசனைச் சுரப்பிகளில் இருந்து பொழிகின்றன. அப்போது தம் கொடுக்குகளையும் தற்காப்புக்குப் பயன்படுத்துகின்றன.[8]

மேற்கோள்

தொகு
  1. Zhang, Z.-Q. (2011). "Phylum Arthropoda von Siebold, 1848 In: Zhang, Z.-Q. (Ed.) Animal biodiversity: An outline of higher-level classification and survey of taxonomic richness". Zootaxa 3148: 99–103. http://mapress.com/zootaxa/2011/f/zt03148p103.pdf. 
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; International Wildlife என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Robinson, William H. (2005). Handbook of urban insects and arachnids. Cambridge, UK: Cambridge University Press. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-81253-5.
  4. Marshall, Stephan A. (June 2006). "4". Insects: Their Natural History and Diversity: With a Photographic Guide to Insects of Eastern North America. Buffalo, NY; Richmond Hill, Ontario: Firefly Books. pp. 63–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55297-900-8.
  5. Cranshaw, W.S. (January 2007). "European Earwigs". 5.533. Colorado State University. Archived from the original on 27 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 25 June 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; gillott என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Resh & Carde என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. Eisner, Thomas; Rossini, Carmen; Eisner, Maria (1941). "Chemical defense of an earwig (Doru taeniatum)". Chemoecology 10 (2): 81–87. doi:10.1007/s000490050011 இம் மூலத்தில் இருந்து 14 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110714075450/http://resources.metapress.com/pdf-preview.axd?code=f2v6d8nxev8qu6tv&size=largest. பார்த்த நாள்: 25 February 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலைவிட்ட_பூச்சிகள்&oldid=4048210" இலிருந்து மீள்விக்கப்பட்டது