மூல உயிரணு தானம்

குருதித் தானம், மூல உயிரணு தானம், எலும்பு மச்சை தானம் என்பவை உலகமெங்கிலும் மிகவும் பிரபல்யமாக உள்ளது. குருதிக் தானம் மிகவும் சாதாரணமாக அனைத்து மக்களிடையேயும் பரவி அனைவருக்கும் மிகவும் பழக்கப்பட்டுவிட்டதொன்றாக இருந்த போதிலும் தற்போது மூல உயிரணு தானம் என்பதும் மிகவும் உன்னதமான ஒன்றாகக் கருத்தப் படுகின்றது. இரத்த தான வங்கிகளே இந்த மூல உயிரணு சேகரிப்பினையும் செய்கின்றன. கனடா இரத்த தான வங்கியின் OneMatch Stem Cell and Marrow Network என்னும் பிரிவு மூல உயிரணு தேவைப்படும் நோயாளிகளுக்குத் பொருத்தமான மூல உயிரணு உள்ளவரைத் தெடித் தரும் ஒழுங்குகளைச் செய்கின்றது. இந்த OneMatch Stem Cell and Marrow Network சர்வதேச சட்டதிட்ட நியமனங்களுக்கு அமைய World Marrow Donor Association (WMDA) இனால் ஆக்கப்பட்ட ஒரு வலைப் பின்னல் ஆகும். உலகெங்கிலும் 55 இற்கும் மேற்பட்ட பதிவுசெய்யும் இடங்களும் அதில் கிட்டத்தட்ட 11 மில்லியன் பதிவுகளையும் இவர்கள் கையாள்கின்றனர். இதனால் உலக ரீதியில் இந்த மூல உயிரணு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இரத்த தானம் தான் நாங்கள் செய்கின்றோமே இந்த மூல உயிரணு தானத்திற்கான அவசியம் என்ன வந்தது என்று எங்களிடையே பல கேள்விகள் எழலாம். குருதிக் தானத்தினை விட பன்மடங்கு வலிமை வாய்ந்தது இந்த மூல உயிரணு தானம். மூல உயிரணுவை எங்கள் முகம் தெரியாத ஒருவருக்கோ அல்லது எங்கள் குடும்பத்தினருக்கோ நாங்கள் வழங்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும் முதலில் மூல அணுவென்றால் என்ன எனத் தெரிந்து கொள்ளுதலும் அத்துடன் இவற்றினை மற்றவர்களுக்கு தானம் செய்வதற்குரிய தேவை என்பதனையும் ஆராய்தல் அவசியமாகின்றது.

மூல உயிரணு என்றால் என்ன?

தொகு

மூல உயிரணுக்கள் என்பவை தங்களை செங்குருதிச் சிறு துணிக்கைகளாகவோ (உடலின் பல பாகங்களுக்கும் பிராணவாயுவினை எடுத்துச் செல்ல உதவி செய்பவை) வெண்குருதிச் சிறு துணிக்கைகளாகவோ ( உடலில் தொற்றுக்கள் நோய்கள் ஏற்படும் போது பிறபொருள் எதிரிகளைச் சுரந்து எதிர்ப்புச் சக்தியினைத் தருபவை) குருதிச் சிறுதட்டுக்களாகவோ ( காயங்கள் ஏற்படும் போது குருதி உறைந்து இரத்தப் பெருக்கினைத் தடை செய்ய உதவி செய்பவை) அல்லது வேறு ஏதாவது வகையான கலங்களாகவோ மாற்றிக் கொள்ளக் கூடிய முதிர்நிலை அடையா (immature cells ) கலங்கள் ஆகும். மற்றைய சாதாரண கலங்கள் (தோலிலுள்ள கலங்கள் அல்லது மற்றைய உறுப்புக்களில் உள்ள கலங்கள்) ஒவ்வொன்றும் வரையறுக்கப்பட்ட தொழில் முறைகளையும் இயக்கங்களையும் கொண்டவை. அந்தந்த கலங்கள் அதற்குரிய தொழிலை மட்டுமே செய்வன. ஆனால் Stem Cell என அழைக்கப்படும் மூல உயிரணுக்கள் வரையறை அற்றவை மட்டுமல்லாது அவை தங்களை வெவ்வேறு அவயவங்களிலுள்ள கலங்களுக்கு ஒப்பாக மாற்றக் கூடியவை. ( கடந்த மாத இதழில் முழு விளக்கமும் அளிக்கப்பட்டதால் இதில் சுருக்கமாகவே தரப்பட்டிருக்கிறது)

மூல உயிரணுக்கள் எங்கு காணப்படுகின்றன?

தொகு

இம் மூல உயிரணுக்கள் எலும்பு மச்சைகளில் ( எலும்பு மச்சை என்பது எலும்பின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான பதார்த்தம்) செறிவாகக் காணப்படுகின்றன. அத்துடன் சாதாரண குருதியிலும், குழந்தை பிறக்கும் போது வரும் நஞ்சுகொடி (Placenta), தொப்புள் கொடி குருதி (umbilical cord blood), 4 அல்லது 5 நாட்கள் வயதுடைய கருக்கட்டிய முளையம் (embryo) போன்றவற்றிலும் காணப்படுகின்றது.

எவ்வகையான நோயுடையோருக்கு இவை தேவைப்படுகின்றன?

Leukemia (குருதிப் புற்று நோய்), Lymphoma (lymphatic system எனப்படும் immune system) போன்ற புற்று நோய் உள்ளவர்களுக்கு இந்த Stem Cell தானம் மிக மிக அவசியமாகின்றது. எலும்பு மச்சையிலுள்ள Stem Cell கள் செங்குருதிச் சிறுதுணிக்கை, வெண்குருதிச் சிறுதுணிக்கை, குருதிச் சிறுதட்டுக்கள் என்பவற்றை உருவாக்கக் கூடியன.


Leukemia எனப்படுவது குருதியில் வெண்குருதிச் சிறுதுணிக்கையின் எண்ணிக்கை அதிகரிப்பது. இவ் வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் எலும்பு மச்சையினால் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் குருதியுள் விடப்படும். சாதாரணமாக உடலில் கிருமித் தொற்றுக்கள் ஏற்படும் போது வெண்குருதிச் சிறு துணிக்கைகள் பிறபொருள் எதிரிகளைச் சுரந்து அக் கிருமிகளுக்கு எதிராக செயற்படும். ஆனால் அளவுக்கதிகமாக வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் உருவாக்கப்படும்போது அவை நோய்த் தொற்றுக்கு எதிராகத் தொழிற்படாது மற்றைய உறுப்புக்களின் தொழிற்பாடுகளைத் தடை செய்யக் கூடியது. இவ்வியாதி உடையவர்களுக்கு இவர்களின் Stem Cell இனை ஆரோக்கியமான Stem Cell இனால் மாற்றீடு செய்யப்படும்.

இவ் விடத்தில் புற்று நோய் பற்றி ஒரு சிறு விளக்கம் தேவைப்படுகின்றது. ஏன் இந்த் வெண்குருதிக் கலங்கள் அளவுக்கதிகமாகத் தோற்றுவிக்கப்பட்டு Leukemia உண்டாகின்றது. ஒவ்வொரு உறுப்பும் பல்லாயிரக் கணக்கான கலங்களால் ஆனது. இக் கலங்களின் தொழிற்பாட்டில் பழைய கலங்கள் இறப்பதும் இழந்த கலங்களைப் புதிய கலங்கள் உற்பத்தியாக்கப்பட்டு நிவர்த்திக்கப்படுவதும் ஒரு சாதாரண தொழிற்பாடாகும். எங்கள் கலங்களின் கருக்களில் ஒவ்வொரு கலமும் எவ்வாறு தொழிற்படவேண்டும் என்பதற்குரிய செயற்பாட்டு விளக்கமானது வகுக்கப்பட்டுள்ளது. இவை genes எனப்படும். இந்த genes இலுள்ள விளக்கமானது ஏதாவது காரணிகளினால் குழப்பப்பட்டு விட்டால் கலம் பிரிவது அழிவது போன்ற தொழில் முறைகளில் பிரச்சனைகள் உண்டாகிவிடுகின்றது. அதனால் இவை மேலதிக கலங்களை உற்பத்தியாக்கத் தொடங்கி விடும். உடலில் தேவைக்கதிகமான கலங்கள் காணப்படும். இத் தேவைக்கதிகமான கலங்கள் இட நெருக்கடியினை ஏற்படுத்தலாம் அல்லது மற்றைய அவயவங்கள் மேல் அழுத்தி பிரச்சனைகள உருவாக்கலாம். பலவிதமான இடையூறுகள் இவற்றினால் ஏற்படும். குருதிப் புற்று நோயில் இவ்வாறு வெண்கலங்களின் எண்ணிக்கை தேவைக்கதிகமாகப் பெருகும். மேலும் ஒவ்வொரு கலத்திற்கும் இடையிலுள்ள இடைவெளிகூட இவ் genes களினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் இந்த இடைவெளிகளில் மாற்றம் ஏற்படுகின்றது. இதுகூட ஒருவகை புற்று நோயாகும்.

நீரிழிவு நோயினை இதுவரை வைத்தியர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றார்களே தவிர அதனை நிவர்த்தி செய்வதற்கு அல்லது அதிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் இந்த Cell-Based Therapies மூலம் நீரிழிவு நோயினை முற்றாக இல்லாமல் செய்யமுடியும் என்னும் நம்பிக்கையினை இந்த மூல உயிரணு கொடுத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக குருதியிலுள்ள குளுக்கோசின் அளவினால் உடலில் ஏற்படும் பல நோய்கள் இணைந்த ஒரு நோய் தான் இந்த நீரிழிவு நோயாகும். உடலிலுள்ள immune system ஆனது தனது கலங்களை எதிரியாக நினைத்து அவற்றை அழிக்க முற்படுவதே நீரிழிவின் மிக முக்கிய பிரச்சனையாகும். இவ்வாறுதான் இன்சுலினைச் சுரக்கும் சதையி என அழைக்கப்படும் pancreas அழிவுக்குள்ளாக்கப் படுகின்றது. இதனால் pancreas இனால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. இன்சுலினின் துணையின்றி குளுக்கோசு கலங்களுள் செல்ல முடியாது தடைப்பட்டு குருதியிலேயே தேங்கி விடுகின்றது. இவ்வாறு தேங்கி நிற்கும் குளுக்கோசானது உடலில் பல பிரச்சனைகளுக்கு வித்தாகின்றது. குளுக்கோசு அதிகரிப்பினால் ஏற்படும் விளைவுகளளில் சில வருமாறு: blindness, kidney failure, heart disease, stroke, neuropathy, and amputations .

இதய வால்வு பழுதுபட்டோர் அல்லது தளர்வடைந்தோருக்கும் இதய தசை தொய்வு மாரடைப்பு போன்ற நோயுள்ளோருக்கு மூல உயிரணுக்கள் செலுத்துவதன் மூலம் அந்நோய்கள் நிவர்த்திக்கப் படுகின்றன.

மூல உயிரணு மாற்றீடு செய்வதனால் நன்மைகள்

தொகு

மூல உயிரணுக்கள் சாதாரண கலங்களை விட வித்தியாசமானவை. எங்கள் உடலில் உள்ள ஏனைய கலங்கள் போலல்லாது எந்த விதமான அல்லது எந்த இடத்தில் இருக்கும் மூல உயிரணுவாயினும் அவை மிகவும் சுலபமாக பிரிந்து daughter cells எனப்படும் தங்களை ஒத்த கலங்களை உருவாக்கக் கூடியவை. இதன் காரணமாகவே இந்த மூல உயிரணுக்கள் குருதி தானம் போல தானம் செய்யக் கூடியவை.

நோய் வாய்ப்பட்ட எலும்பு மச்சையினை ஆரோக்கியமான மச்சையிலுள்ள மூல உயிரணுக்களால் மாற்றீடு செய்தல். இவ்வாறு மாற்றீடு செய்யும்போது நோயாளிக்கு high doses of radiation and/or chemotherapy வழங்கப்பட்டு அவரது எலும்பு மச்சை அழிக்கப்படும். பின்னர் ஆரோக்கியமான மூல உயிரணுவானது நரம்பினூடாக intravenously செலுத்தப்படும்

யார் தானம் செய்யத் தகுதியுடையவர்கள்

தொகு

குருதி தானம் செய்வது போல 17 க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மிகவும் ஆரோக்கியமானவராக இதய நோய், cancer, blood diseases, insulin-dependent diabetes and infectious diseases such as HIV/AIDS, hepatitis B and C. போன்ற நோய்களற்றவராக இருத்தல் வேண்டும். அத்துடன் தானம் வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் உடல் எடை, உயரம் போன்றவற்றில் சில கட்டுப்பாடுகள் உண்டு. இந்த உயரத்திற்கும் உடல் எடைக்கும் தொடர்பான அட்டவணையினைக் கீழ்கண்ட இணையத்தள முகவரியில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். http://www.blood.ca/CentreApps/Internet/UW_V502_MainEngine.nsf/resources/docs/$file/heightweightchart2009.pdf பரணிடப்பட்டது 2011-03-03 at the வந்தவழி இயந்திரம்

ஒருவர் தானம் வழங்கப் பொருத்தமானவர்தானா? தானம் வழங்குவதால் அவருக்கு தீங்குகள் பக்கவிளைவுகள் ஏற்படுமா? தானம் அளிப்பவர் சத்திர சிகிச்சைக்குள்ளாக வேண்டுமா? இவ்வாறான பல கேள்விகளுக்கும் சில பிழையான கருத்துக்களுக்கும் தீர்வு

நீங்கள் ஒருவருக்கு எலும்பு மச்சை அல்லது blood stem cells தானம் வழங்க பொருத்தமானவரா எனக் கண்டறிய வைத்தியர்கள் human leukocyte antigen (HLA) typing என்னும் சோதனையினைச் செய்வார்கள். இந்த HLA புரதம் தாய் தகப்பனிடமிருந்து பெறப்பட்ட ஒன்றாகும். இதனால் சகோதரங்கள் மிக மிகப் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். மேலும் தானம் வழங்குபவருக்கு பிறப்புரிமையியல் ( பரம்பரை) முறையில் கடத்தப்படக் கூடிய நோய்கள் இருக்கின்றதா எனவும் ஒரு பரிசோதனை செய்யப்படும். இவ்வாறான நோயுள்ளவர்களினால் இவர்களது நோய் தானம் பெறுபவரினை அடைவதனைத் தடுப்பதற்காக எடுக்கும் முன்னேற்பாடு இதுவாகும்.

மேலும் Stem Cell தானம் செய்வதனால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுவிடும் என ஒரு சிலர் நினைக்கின்றார்கள். எந்த விதத்திலும் முள்ளந்தண்டினைப் பாதிக்காது என்பது மட்டுமல்ல முள்ளந்தண்டிலிருந்து எதுவும் எடுக்கப்படுவதில்லை.

என்பு மச்சை தானம், குருதி தானம் என்பவை மாற்றீட்டிற்கான குருதி மூல உயிரணுக்களை (blood stem cells for transplantation) வழங்குகின்றன என்பதும் முன்பெல்லாம் ஒருவருக்கு எலும்பு மச்சை தானமளிக்க வேண்டும் எனின் தானம் அளிப்பவர் இடுப்பு எலும்பில் ஒரு சிறு சத்திர சிகிச்சை செய்தே இந்த குருதிக்குரிய மூல உயிரணு எடுக்கப்படும் என்பதும் அனைவரும் தெரிந்து கொண்டவிடயம். இதனால் சத்திர சிகிச்சைக்குள்ளாகி இன்னொருவருக்கு தானம் செய்ய பலருக்குப் பயம் இருந்து வந்தது. ஆனால் தற்போது சத்திர சிகிச்சைக்கான தேவை அற்றுப் போகின்றது ஏனெனெல் இவை நேரடியாக எங்கள் சாதாரண குருதியிலிருந்து (peripheral blood stem cell (PBSC) எடுக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது குழந்தைகள் பிறக்கும்போது அவர்களது தொப்புள் கொடி, நச்சு கொடி என்பவற்றிலிருந்தும் blood stem cells எடுக்கப்படுகின்றது. மேலும் ஆச்சரியம் என்னவென்றால் பெண்களின் மாதவிலக்கு குருதியில் கூட எடுக்கலாம் என ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றிற்கான மேலதிக ஆராய்ச்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் இதனை இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எலும்பு மச்சை தானம் அல்லது குருதி மூல உயிரணுதானம் என்பவற்றிற்கு பக்கவிளைவுகள் மிக மிக மிக அரிதாகவே இருப்பதால் பொதுவாக பக்கவிளைவுகள் அற்றதாகவே கருதப்படுகின்றது. ஆனால் எங்கள் குருதியில் பெருமளவு தொகையான மூல உயிரணுக்கள் இல்லையாதலால் குருதியில் இருக்கும் மூல உயிரணுக்களின் எண்ணிக்கையினைக் கூட்டுவதற்கு தானம் வழங்குபவருக்கு தானம் வழங்குவதற்கு முன் நான்கு நாட்களுக்கு ஊசி மூலம் ஒரு மருந்து கொடுக்கப் படும். இம் மருந்து மிகச் சிலருக்கு லேசான தலைவலி, தசை எலும்பு போன்றவையில் மிகவும் மெல்லிய வலி தூக்கம் குழம்புதல் போன்றவற்றைத் தோற்றுவிக்கலாம். இதற்கு acetaminophen எடுத்தால் இவ் இடையூறுகள் அற்றுப் போகும். ஐந்தாவது நாள் உடம்பிலிருந்து குருதி எடுக்கப்படும். இது apheresis என அழைக்கப்படும். இப் படிமுறையின் போது கையிலிருந்து எடுக்கப்படும் குருதி ஒரு இயந்திரத்தினூடு அனுப்பப் பட்டு மூல உயிரணு பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் குருதி உடலினுள் செலுத்தப்படும். இச் செய்முறைக்கு கிட்டத்தட்ட 4 – 6 மணித்தியாலங்கள் எடுக்கும். அத்துடன் எங்கள் குருதியில் இருக்கும் blood stem cells இன் எண்ணிக்கைக் கேற்ப எத்தனை தடவை நாங்கள் apheresis செய்ய வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும். பின்னர் குருதியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மூல உயிரணுவானது Endotaxin Test எனப்படும் பரிசோதனைக்குட்படுத்தப்படும்.

மிகவும் அதிகளவிலான மூல உயிரணுக்களை நாம் குப்பையில் போடுவதாக கனடிய புற்று நோய் ஆராய்வாளரும் மருத்துவருமான Dr. Keating எடுத்துக் காட்டியுள்ளார். அவரவர் குழந்தைகளின் தொப்புக் கொடி குருதியினை தங்கள் குடும்ப நலனுக்காக வங்கியில் இடலாம். அப்படி வங்கியில் இட வசதியற்றவர்கள் அல்லது அதற்கு முக்கியத்துவம் அளிக்காத ஒவ்வொருவரிடமும் அவர்கள் அதனைத் தானம் செய்வார்களா என அறிதல் முக்கியம் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு பெற்றோர் தானம் செய்தால் இது நாடளாவிய ரீதியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் கூட பலருக்கு உதவக் கூடியதாக இருக்கும். தானம் வழங்கப்படும் தொப்புள் கொடி குருதியானது உடனடித் தேவையாக குருதிப் புற்று நோய் போன்ற நோய்களுக்குப் பாவிக்கப்படுகின்ற போதிலும் இதனால் மேலும் பல சாதனைகளை மருத்துவ உலகில் செய்யலாம் என்பது தெளிவாகின்றது. Liver, nerve, brain and pancreatic cells போன்ற அங்கங்கள் பழுதடைந்தவர்களுக்கு இந்த மூல உயிரணுக்களைக் கொண்டு புதிய அங்கங்கள் அல்லது கலங்கள் உருவாக்கப்பட வசதிகள் இருப்பதனால் எதிர்காலத்தில் பல நோய்களுக்கு இது நிவாரணியாக அமையலாம். மேலும் குருதியிலுள்ள மூல உயிரணுக்களைப் போலல்லாது தொப்புள் கொடி குருதியிலிருந்து பிரித்தெடுப்பது மிகவும் சுலபம். இவ்வாறு பிரித்தெடுத்து இதனை திரவ நைதரசனுள் கிட்டத்தட்ட 1900 C ல் பாதுகாத்து தேவை ஏற்படும் போது இளகவைத்து பாவிக்கப்படும்.

மூல உயிரணு தானம் வழங்கிய கண்ணன் என்பவர் தனது அனுபவத்தினை கூறுகின்றார். கீழ்கண்ட முகவரியில் பாருங்கள் http://www.youtube.com/watch?v=5NtSHDGrZMY எப்படி ஒருவரது குருதியிலிருந்து Stem Cell பிரித்தெடுக்கப்படுகின்றது என்பதனைக் கீழ்கண்ட முகவரி காட்டுகின்றது http://www.youtube.com/watch?v=Fl13elGc4dQ

புதிதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் உங்கள் வம்சத்தினை வரும் நாட்களில் பாதுகாக்க தொப்புள் கொடியினை cord blood banking ல் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு சேகரிக்க விரும்பாதவர்கள் அதனை வீணே குப்பையில் எறிந்து விடாது தானமாக வழங்கினால் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட நோய்களுக்கு அது மருந்தாகலாம். மேலதிக விபரங்களுக்கு இவ் இணையத்தளத்தினைப் பாருங்கள்.

http://www.lifebank.com பரணிடப்பட்டது 2017-10-16 at the வந்தவழி இயந்திரம்

தானத்தில் சிறந்த தானம் உயிர்கொடுக்கும் தானம். எங்கள் உயிரை வைத்துக்கொண்டே இன்னொருவருக்கு உயிர் கொடுக்கக்கூடியதாக இருக்கும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தன்னுயிர் போல் மன்னுயிரும் காப்போம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூல_உயிரணு_தானம்&oldid=3225539" இலிருந்து மீள்விக்கப்பட்டது