மூவேந்தர் குடிப் பூ

சேர, சோழ, பாண்டியர் தம் குடியின் அடையாளச் சின்னமாக வெவ்வேறு பூக்களை அணிந்தனர். இதனைக் குடிப் பூ

சேர, சோழ, பாண்டியர் என்னும் தொகைச்சொல் மூவேந்தரைக் குறிக்கும். இவர்கள் தம் குடியின் அடையாளச் சின்னமாக வெவ்வேறு பூக்களை அணிந்தனர். இதனைக் குடிப் பூ என்றும் அடையாளப் பூ என்றும் சொல்லலாம்

  • சேரர் - பனைமடலால் செய்த பூ
  • சோழர் - ஆர் (ஆத்தி)
  • பாண்டியர் - வேம்பு

சான்றுகள்

தொகு
  • தொல்காப்பியம் புறத்திணையில் வெட்சித்திணையின் துறைகளைக் கூறும்போது தொல்காப்பியர் மூவேந்தரின் குடிப்பூ பற்றிக் குறிப்பிடுகிறார். 'போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மா பெருந் தானையர் மலைந்த பூ' என்கிறார். [1]
  • 'வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் கொற்ற வேந்தர்' என்று மூவேந்தரின் குடிப்பூக்கள் அடுக்கிக் காட்டப்பட்டுள்ளன. [2]
  • புலவர் கோவூர் கிழார் நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் அறிவுரை கூறும்போது 'நீங்கள் இருவரும் ஆர் (=ஆத்திப் பூ) சூடியவர்கள். பனைமரத்தினை வெண்தோடும், வேம்பும் அணிந்தவர் (முறையே சேரரும், பாண்டியரும்) அல்லர் என்று குறிப்பிடுகிறார். [3]
    • பனங்குருத்து மாலைகளைத் தலையில் சூடிக்கொண்டனர். [4]

மேலும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. தொல்காப்பியம் புறத்திணையியல் நூற்பா 4-4
  2. புறநானூறு 338
  3. புறநானூறு 45
  4. மறங்கெழு போந்தை வெண்தோடு புனைந்து நிறம் பெயர் கண்ணி - பதிற்றுப்பத்து 51
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவேந்தர்_குடிப்_பூ&oldid=1233959" இலிருந்து மீள்விக்கப்பட்டது