மெக்கா கோலா
மெக்கா கோலா ஒரு வகை கோலா மென்பானமாகும். அமெரிக்க எதிர்ப்பு உணர்வு கொண்ட வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் அமெரிக்க மென்பானங்களான கொகா கோலா, பெப்சி போன்றவற்றுக்குப் பதிலாக அறிமுகமான பானம் இதுவாகும். இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா என்பதை பெயரில் கொண்டிருக்கும் இவ்வகைப் பானம் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் விற்பனையாகிறது. இப்பானம் முதலில் பிரான்சில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்கா கோலா | |
---|---|
வகை | கோலா |
உற்பத்தி | மெக்கா கோலா உலக நிறுவனம் |
மூல நாடு | பிரான்சு |
அறிமுகம் | நவம்பர் 2002 |
சார்பு உற்பத்தி | கொகா கோலா, சம் சம் கோலா, கிப்லா கோலா |