மெக்சனா எருமை
மெக்சனா (Mehsana) இந்தியாவின் குசராத்து மாநிலத்திலிருக்கும் நீர் எருமைகளின் இனமாகும். முர்ரா மற்றும் சூர்த்தி எருமையின் கலப்பினமாக மெக்சனா எருமை தோற்றுவிக்கப்பட்டது.[1] இவை பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. இவை இந்தியாவின் சிறந்த பால் இனங்களில் ஒன்றாக அறியப்படுகின்றன.[2] இந்த எருமைகள் அதிகமாகக் காணப்படும் வடக்கு குஜராத்தில் உள்ள மெக்சனா நகரத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.dairyknowledge.in/article/mehsana
- ↑ Pundir, R.K. (2000). "Characterization of Mehsana Buffaloes in India". Animal Genetic Resources Information 28. http://www.cattlenetwork.net/docs/agri/agri27_5.pdf. பார்த்த நாள்: 2021-02-21.