மெக்சிக்கோ தோல்நாய்

மெக்சிக்கோ தோல்நாய் அல்லது ஷோலோ என்னும் நாய் மெக்சிக்கோவில் காணப்படும் தனியான ஒரு நாய் இனம் ஆகும். இதன் உடலில் மயிரே இல்லாமலோ அல்லது மிக மிகக்குறைவாகவே உடல்மயிர் உள்ள நாய் ஆகும். இதலானேலே மெக்சிக்கோ மயிரிலி நாய் என்றும் இது சிறப்பாக அழைக்கப்படுகின்றது. இதன் ஆங்கிலப் பெயர் Xoloitzcuintli (ஷோ-லோ-ஈட்ஸ்-குயின்ட்லி).[1][2][3]

உடம்பில் மயிரில்லாத மெக்சிக்கோ தோல்நாய். இத்னை ஷோலோ (Xolo) என்றும் அழைப்பர்.

மெக்சிக்கோவிற்கு ஸ்பானியர் வருகைக்கு முன்னர் வாழ்ந்த முதற்குடிகளாகிய ஆசுட்டெக் காலத்தில் (1600களில்) பரவலாகக் காணப்பட்ட இந்த நாய் இனம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து அறியப்படுகின்றது. இந்த நாய் இனம் 1940களில், அருகி இருந்த நிலையில் இருந்தது. இன்று மீட்கப்பட்டு வளர்ப்பு நாயாக அறியப்படுகின்றது.

தோற்றம் உருவம்

தொகு

இந்த நாய் இனம் மூன்று பரும அளவுகளில் இன்று காணப்படுகின்றது. ஏறத்தாழ 4 கிலோ கிராம் முதல் 50 கிலோ கிராம் வரை இவைகளின் எடை இருக்கும். வேட்டை நாய் போல் உடல் இறுக்கமாகவும் ஒல்லியாகவும் இருக்கும். காதுகள் வௌவாலின் காதுகளைப் போல் துடுக்கி தூக்கி நிற்கும். நிறம் பெரும்பாலும் கறுஞ்சாம்பல் நிறத்துடன் (இரும்பு நிறத்தில்) காணப்படும். உடலில் மயிர் இல்லாததால், இது தோல்நாய் என்னும் வகை நாயாகும். தோல் மென்மையானதாகவும் வெதுவெதுப்பாகவும் (104 °F/ 40 °C.) இருக்கும். இந் நாயின் மென்மையான தோல் அதன் கால் விரல்களுக்கு இடையே உள்ள எண்ணெய்ச் சுரபிகளால் பரப்பப்படும் எண்னெய்ப் பசவால் மழமழப்புடன் இளக்கமாக இருக்கும்.

நம்பிக்கையும் பழக்கமும்

தொகு

ஆசுட்டெக் மக்களின் தொன்நம்பிக்கைப் படி ஷோலோட்டில் (Xolotl) என்னும் அவர்களின் கடவுளர்களில் ஒருவர் இந்த தோல்நாயை (ஷோ-லோ-ஈட்ஸ்-குயின்ட்லியை) "உயிரின் எலும்பில்" இருந்த வெள்ளியில் இருந்து ஆக்கினர் என நம்பினர். ஷோலோட்டில் என்னும் கடவுள் இதனை மனிதனுக்குப் பரிசாக அளித்தார். மனிதன் இதனின் உயிரைக் காக்கவேண்டும் என்றும், இதற்குக் கைமாறாக இந்த நாய் மனிதன் மிக்ட்லான் (Mictlan) எனும் 9ஆவது பாதாள இறப்புலகத்தில் வழிகாட்டியாக இருந்து சொர்க உலகுக்கும் இட்டுச் செல்லும் என்று நம்பினர். இந்த நாய் பலவகையான நோயைக் குணப்படுத்தும் என்றும் நம்புகின்றனர்.

ஆசுட்டெக் மக்கள் இந்த நாயின் இறைச்சியை உண்டனர்.

வெளி இணைப்புகள்

தொகு

மெக்சிக்கோ தோல்நாய் (ஷோலா) பற்றிய வலைத்தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. FCI Breed Standard
  2. Nahuatl Dictionary. (1997). Wired Humanities Project. University of Oregon. Retrieved September 1, 2012, from link பரணிடப்பட்டது 2016-12-03 at the வந்தவழி இயந்திரம்
  3. "GCH Bayshore's Giorgio Armani Leads the Way for Xoloitzcuintli Breed". Purina ProClub. பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிக்கோ_தோல்நாய்&oldid=4102312" இலிருந்து மீள்விக்கப்பட்டது