மெசலூனா (இத்தாலிய மொழி: Mezzaluna, ஆங்கிலம்: mincing knife) என்பது இத்தாலியின் வெள்ளைப்பூண்டு, இலைகள், கறி ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கும் பாரம்பரியக் கத்தியாகும். இத்தாலிய மொழியில், மெசலுனா என்றால், 'பிறை நிலா' என்பது பொருளாகும். இத்தாலியின் பீத்சா உணவு விடுதிகளில் இது அதிகம் பயனாகிறது.[1] வெட்டும் தகடின் இருபுறமும் கைப்பிடி இருக்கும். தகடுக்கு அடியில் வைத்து, பூண்டுகளை நறுக்க இந்த கைப்பிடி உதவுகிறது.[2] இதில் பெரும்பாலும் ஒற்றை வெட்டுத்தகடு இருக்கும். இரண்டு அல்லது மூன்று வெட்டுத் தகடுகளும் பயன்படுத்தப் படுகின்றன.[3][4][5]

பூண்டு நறுக்க ஒற்றை வெட்டுத்தகடு
இலைகளை நறுக்க, இரண்டு தகடு
கறி நறுக்க மூன்று தகடு

மேற்கோள்கள் தொகு

  1. Wiener, Scott (December 8, 2012). "A Brief History of the Pizza Slicer". Serious Eats. Scott's Pizza Chronicles. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
  2. "What is a Mezzaluna?". wiseGEEK. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
  3. McGee, Harold (2010-10-26). Keys to Good Cooking (in ஆங்கிலம்). Doubleday Canada. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780385671309.
  4. Willan, Anne (1989-09-17). La Varenne Pratique: Part 4, Baking, Preserving & Desserts (in ஆங்கிலம்). BookBaby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780991134632.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Hesser, Amanda (2002). "TEST KITCHEN; A Half Moon That Brightens Kitchen Labors" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2002/01/23/dining/test-kitchen-a-half-moon-that-brightens-kitchen-labors.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசலூனா&oldid=3920869" இலிருந்து மீள்விக்கப்பட்டது