மெசியாவின் கழுதை

யூத மரபில், மெசியாவின் கழுதை (The Messiah's Donkey, எபிரேயம்: חמורו של משיח) என்பது கடைசி நாட்களில் உலகத்தை மீட்க மெசியா ஏறிவரும் கழுதையைக் குறிக்கிறது.[1] தற்கால எபிரேயத்தில், “மெசியாவின் கழுதை” என்னும் சொற்றொடர் ஒரு ‘அழுக்கு/கீழ்த்தர வேலையை’ மற்றவருக்குப் பதிலாகச் செய்கிற ஒருவரைக் குறிக்கிறது.

இந்த நம்பிக்கையின் தோற்றமூலத்தை செக்கரியா 9:9இல் காணலாம் "... மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்."[2] இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அரசர்' மெசியாவைக் குறிப்பதாக யூதமத மரபில் சஸல் (Chazal) எனப்படும் இறைமனிதர்களால் விளக்கப்பட்டுள்ளது.

பாபிலோனிய தல்மூத்-இல் (சனகதரின் - யூத தலைமை சங்கம் 98a) இந்த வசனத்தைப் பற்றிய விவரணையில் பாரசீக அரசர் செவார் (Shevor) பற்றிய ஒரு கதை கூறப்படுகிறது. அதில் அவர் இறைவாக்கினர்களில் (Amoraim) ஒருவரான சாமுவேலைக் இப்படியாக வினவுகிறார்:
உங்களுடைய மெசியா எதற்காக குதிரையின்மீது ஏறிவரவில்லை? அவரிடம் இல்லை என்றால், மிக வேகமான என்னுடைய குதிரைகளிலிருந்து ஒன்றை நான் மகிழ்வோடே அளிக்க விரும்புவேன்! அரசரி பரிகாசத்திற்கு பதிலாக சாமுவேல் பதிலளித்தது: ஒரு நூறு வண்ணங்களில் நிறமுடைய குதிரை உங்களிடம் உள்ளதா? [ஏனெனில், மெசியாவின் கழுதை அப்படிப்பட்டதாக இருக்கும்].

கிறிஸ்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் (மாற்கு 11:1-11) இயேசு ஒலிவ மலையை நெருங்கியபோது, அவர் தன்னுடைய சீடர்களில் இருவரை அருகிலிருந்த கிராமத்திலிருந்து ஒரு கழுதையைக் கூட்டிக்கொண்டுவர அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் அழைத்துக்கொண்டு வந்தபின், இயேசு அந்த கழுதையின்மீது ஏறி தன்னை கரகோஷம் எழுப்பி வரவேற்ற மக்கள் கூட்டம் நடுவே எருசலேம் நகரத்த்துக்குள் கடந்துசென்றார். கிறிஸ்தவ மதம்சார் மரபின்படி இதுவே செக்கரியா 9:9இல் கூறப்பட்ட இறைவாக்கின் நிறைவேறுதலாகும்.

சில இசுலாமிய வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்களின்படி உமர் இபுன் அல்-கத்தாப் ஒரு வேலையாளுடனும் ஒரு கழுதையுடனும் தனியே பயணித்தபோது மெசியாவின் கழுதையைப்பற்றிய முன் அறிவிப்பு நடந்தேறியது. அவர் எருசலேம் நகரத்தை வந்தடைந்தபோது, ஸோப்ரோனியஸ் அவரைக் கண்டு வாழ்த்துகிறார். உலகிலேயே மிகவும் வலிமைவாய்ந்த மக்கள்களில் ஒருவரான இசுலாமியர்களின் கலீபா கழுதையின்மீது ஏறிவந்தது இவரைக் கட்டாயம் வியக்கவைத்திருக்கும். இது செக்கரியா 9:9 இல் “...உன் அரசர் வருகிறார்’ என்ற முன் அறிவிப்பின் நிறைவேறுதலானது

மேற்கோள்கள் தொகு

  1. Babylonian Talmud, Sanhedrin 98a
  2. "Passage Lookup: Zachariah 9:9". BibleGateway.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசியாவின்_கழுதை&oldid=2441432" இலிருந்து மீள்விக்கப்பட்டது