மெட்டாபாசுபேட்டு

மெட்டாபாசுபேட்டு (Metaphosphate) என்பது ஓர் அயனியாகும். ஆக்சியெதிர்மின் அயனியான இதன் அனுபவாய்ப்பாடு PO3 என்பதாகும்[1].

வளைய டிரைமெட்டாபாசுபேட்டு

மெட்டாபாசுபேட்டு அயனியின் கட்டமைப்பை ஒவ்வோர் அலகும் அடுத்த அலகுடன் இரண்டு மூலைகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய PO4 கட்டமைப்பு அலகுகள் மூலம் விளக்கமுடியும். இரண்டு வழிகளில் இது வரமுடியும்.

  • டிரைமெட்டாபாசுபேட்டில் விளக்கப்பட்டது போல ஒரு வளையம் உருவாதல்.
  • அமோனியம் மெட்டாவனேடேட்டு சேர்மத்தில் உள்ளது போல முடிவற்ற சங்கிலி உருவாதல் என்பன அவ்விரண்டு வழிகளாகும்.

மெட்டாபாசுபாரிக் அமிலங்கள் எதுவும் தனித்து தயாரிக்கப்படவில்லை என்றாலும் மெட்டாபாசுபாரிக் அமிலங்களின் (HnPnO3n) உப்புகளாக மெட்டாபாசுபேட்டுகளைக் கருதமுடியும். மெட்டாபாசுபாரிக் அமிலங்களை H2O•P2O5 என்ற வாய்ப்பாட்டால் முறைபடுத்த முடியும். H3PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட பாசுபாரிக் அமிலத்துடன் ஒப்பிடுகையில் மெட்டாபாசுபாரிக் அமிலங்களை 3H2O•P2O5 என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தலாம். H4P2O7 என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் பைரோபாசுபாரிக் அமிலத்தையும் 2H2O•P2O5 என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தலாம்

கரிமத் தொகுப்பு வினைகளில் மெட்டாபாசுபேட்டுகள் வெள்ளை பாசுபரசுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன[2].

மேற்கோள்கள்

தொகு
  1. Averbuch-Pouchot, M.T; Durif, A. (1996). Topics in Phosphate Chemistry. World Scientific Pub Co Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-02-2634-9.
  2. "Sidestepping white phosphorus". C&EN Global Enterprise 96 (7): 7–7. 2018. doi:10.1021/cen-09607-scicon1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2474-7408. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டாபாசுபேட்டு&oldid=3581421" இலிருந்து மீள்விக்கப்பட்டது