மெண்டரின் தோடம்பழச் செடிகள்
மெண்டரின் தோடம்பழச் செடிகள் (Mandarie Orange plants) என்பது மெண்டரின் தோடம்பழம் காய்க்கும் சிறிய செடி வகைகள் ஆகும். சிலர் இதனை சிறிய வகை மரங்கள் என்று குறிப்பிட்டாலும் இதன் தோற்றம் ஒரு செடியாகவே உள்ளது. இந்த மெண்டரின் தோடம்பழச் செடிகளில் பல உட்பிரிவுகள் உள்ளன. சிலச் செடிகள் ஒரு அடி மட்டுமே வளரும். சில 2, 3, 4, 5 அடிகள் வரை வளரும். இந்த சிறிய தோடம்பழச் செடிகளில், பூஞ்செடிகளில் பூக்கள் பூத்து குளுங்குவதுப் போன்று தோடம்பழங்களும் நூற்றுக்கணக்கில் காய்த்துக் குளுங்கும்.
சீனப் புத்தாண்டு மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம்
தொகுஇந்த மெண்டரின் தோடம்பழச் செடிகளின் பயன்பாடானது சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சீனப் புத்தாண்டையொட்டி வீடுகள், வேலைசெய்யும் பணிமனைகள், வணிக நிலையங்கள் போன்ற இடங்களின் முகப்பில் அல்லது விராந்தையில், (வீடுகளின் முன்னால் வைக்கும் பூஞ்செடிகள் போன்று) மெண்டரின் தோடம்பழச்செடியை அழகாக காட்சிப்படுத்தி வைப்பது சீனப் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். சீனப் புத்தாண்டு காலத்தில் இந்த மெண்டரின் தோடம்பழச் செடிகள் வணிகம் வீதிகளெங்கும் களைக்கட்டும்.
பிற நாடுகளில்
தொகுசீனப் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்றான, சீனப் புத்தாண்டுக் காலத்தில் மெண்டரின் தோடம்பழச் செடிகளை வீட்டின் முகப்பில் அல்லது விராந்தையில் வைப்பது சீனாவில் மட்டும்மன்றி, ஹொங்கொங், மக்காவ், தாய்வான் மற்றும் சீனர்கள் செறிந்து வாழும் அல்லது சீனப் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பரவிய நாடுகளான சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இப்பழக்கவழக்கம் காணப்படுகின்றது.