மெண்டெலியப் பிழை

மெண்டெலியப் பிழை என்பது, உயிரின மரபியல் ஆய்வில், ஒரு தனி உயிரியில் நிலவும் தன் பெற்றோரில் இருந்து மெண்டெலிய மரபுப்பேறாகப் பெறப்படாத மாற்றுருவை அல்லது மரபன் தனிமத்தைக் குறிக்கிறது. குறிப்பிட்ட மரபனின் ஒத்த தோற்றவகைமைகளின் உறவுடைய தனி உயிரிகளின் இனப்பெருக்கம்வழிப் பெறும் பண்புகளே மரபுப்பேறு என வரையறுக்கப்படுகிறது. மெண்டெலியப் பிழை பெற்றோர்களின் மரபன் ஆய்வால் வரையறுக்கப்பட்ட மரபுப்பேற்றுக் கட்டமைப்பு சரியில்லை என்பதைச் சுட்டுகிறது. அதாவது இது தனி உயிரிக்குரிய ஒரு பெற்றோரின் தகவல் சரியாக அமையவில்லை என்பதையே சுட்டுகிறது.[1]

மெண்டெலியப் பிழைகள் தோற்றவகைமைப் பிழைகளாக அமையலாம். அதாவது தவறுதலாகச் சுட்டப்படும் பெற்றோர் இணைப் பிழைகளாக இருக்கலாம். அல்லது சடுதிமாற்றத்தால் ஏற்பட்ட பிழைகளாகவும் இருக்கலாம். தனி உயிரியில் அதன் பெற்றோரின் அனைத்துவகைத் தோற்றவகைமைச் சேர்மானங்களோடும் பொருந்திவராத ஓர் இயல்பு நிலவுவதை மெண்டெலியப் பிழை நிறுவுகிறது. இவ்வகைத் தீர்மானிப்புக்கு கால்வழியைச் சரிபார்க்கவேண்டும். என்றாலும் கால்வழிக்கும் தோற்றவகைமைக்கும் உள்ள முரண்பாடு நிறுவல் ஒரு NP-முழுமை சிக்கல் ஆகும். இந்த வரையறையோடு பொருந்தாத மரபியல் பொருந்தாமைகள் மெண்டெலியஞ்சாராத பிழைகள் எனப்படும்.

இந்தப் பிழைகளைக் கண்டுபிடிக்க புள்ளியியல் ஆய்வுமுறை பயன்படுகிறது. தனி உயிரியுடன் இணைந்த குறிப்பிட்ட நோய்மரபனைக் கண்டறிய இது உதவுகிறது. மரபன்களால் உருவாகும் இவ்வகை மாந்தரின நோய்கட்கு எடுத்துகாட்டாக ஃஅண்டிங்டன் நோய் அல்லது மார்ஃபன் நோய்த்தொகையைக் கூறலாம்.[2]

மேலும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Mendelian error detection in complex pedigree using weighted constraint satisfaction techniques". 209.85.165.104. Archived from the original on 2012-12-09. பார்க்கப்பட்ட நாள் 2008-07-13. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Statistical Genetics Analysis". bioinf.wehi.edu.au. Archived from the original on 2004-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெண்டெலியப்_பிழை&oldid=3792857" இலிருந்து மீள்விக்கப்பட்டது