மெத்திலிடின் குழு
மெத்திலிடின் குழு (.Methylidene group) என்பது கரிம வேதியியலில் ஒரு மூலக்கூறின் எந்தவொரு பகுதியிலாவது இரண்டு ஐதரசன் அணுக்கள் ஒரு கார்பன் அணுவுடன் பிணைக்கப்பட்டு அது எஞ்சிய மூலக்கூறுடன் இரட்டைப் பிணைப்பால் இணைக்கப்பட்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும். இக்குழு CH2= என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. இக்குறியீட்டிலுள்ள ’=’ இரட்டைப் பிணைப்பை குறிக்கிறது. [1] [2]
இவ்வமைப்பு மெத்திலீன் குழுவுக்கு அல்லது மெத்திலீன் பாலம் என்று அழைக்கப்படும் அமைப்புக்கு மாறாக உள்ளது. அதாவது மெத்திலிடின் குழுவிலுள்ளது போல −CH2− குழு இடம்பெற்றிருந்தாலும் இங்கு அது எஞ்சியிருக்கும் மூலக்கூறுடன் இரண்டு ஒற்றை பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது. [3][4] இவ்வேறுபாடு பெரும்பாலும் முக்கியமானதாகும். ஏனென்றால் இரட்டை பிணைப்பு என்பது இரண்டு ஒற்றை பிணைப்புகளிலிருந்து வேதியியல் ரீதியாக வேறுபட்டது ஆகும்.
மெத்திலிடின் என்ற இதேபெயர் CH2 என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் இயங்குருபுவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதுவே ஒரு மூலக்கூறாக கார்பீன் என்ற பெயாராலும் அழைக்கப்படுகிறது. [5][6] முற்காலத்தில் மெத்திலீன், மெத்திலிடின் மற்றும் கார்பீன் என்ற மூன்று மாற்றியன்களுக்கும் மெத்திலீன் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது.
சில மூல மூலக்கூறுகளின் அருகிலுள்ள இரண்டு ஐதரசன் அணுக்களுக்கு ஒரு மெத்திலிடின் குழுவை பதிலீடு செய்வதன் மூலமாகத் தோன்றியதாக இருந்தாலும் கூட பல கரிமச் சேர்மங்கள் மேற்கூறிய முறையில் பெயரிடப்பட்டும் வகைப்படுத்தப்பட்டும் உள்ளன. எடுத்துக்காட்டாக வளையபுரோப்பீன் என்பது மெத்திலீன் வளையபுரோப்பீன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.