மெத்திலிடைன் குழு
மெத்திலிடைன் குழு (Methylidyne group) என்பது ஒரு மூலக்கூறில் ≡CH என்ற பிணைப்பைக் கொண்டு பதிலீடு அல்லது வேதி வினைக்குழு இரண்டில் ஒன்று நடுநிலை பகுதியாகக் காணப்படும் சேர்மத்தைக் குறிக்கிறது. மெத்திலிடைன் என்ற ஒற்றறைச் சொல்லாலும் இக்குழுவைக் குறிப்பிடுவர். இதன் மூலக்கூற்று வாய்ப்பாட்டில் ஒரு கார்பன் அணு ஐதரசன் அணுவுடன் ஓர் ஒற்றைப்பிணைப்பாலும் எஞ்சியுள்ள மூலக்கூறு முப்பிணைப்பாலும் பிணைக்கப்பட்டிருக்கும்.[1] எடுத்துக்காட்டாக H3C−(CH2)5−N+≡CH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் என்–மெத்திலிடைன்-1-எக்சனாமினியம் என்ற சேர்மத்தைக் கூறலாம்.
மெத்திலிடைன் என்ற பெயர் மெத்திலிடைன் தனி உருபைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்விரு அணுக்களும் எந்தவொரு சேர்மத்திலும் இணைந்திருப்பதில்லை.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ (2013) Methylidyne group in the Chemical Entities of Biological Interest (ChEBI) database. Accessed on 2013-02-06.