மெனிக்கடவரைக் கோட்டை
மெனிக்கடவரைக் கோட்டை (Menikkadawara fort) என்பது கேகாலையின் மெனிக்கடவரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கோட்டையாகும்.[1] போர்த்துக்கேயர் இதனை "மனிகராவர்" என அழைத்தனர்.
மெனிக்கடவரைக் கோட்டை | |
---|---|
கேகாலை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 7°11′17″N 80°15′04″E / 7.187990°N 80.251145°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | நிலத்தின் கீழ் சில எச்சங்கள் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1599 |
கட்டியவர் | போர்த்துக்கேயர் |
சனவரி 1599 இல், போர்த்துக்கேயர் இப்பகுதியில் வேலி அரண் ஒன்றை அமைத்தனர்.[1] 1603 இல், போர்த்துக்கேயர் கண்டிப் படைகளின் தாக்குதல் காரணமாக பின்வாங்கினர். 1626 இல், இக்கோட்டையைப் பலப்படுத்தி மேம்படுத்தினர்.[1] செவ்வகமான இக்கோட்டை போர்ட்டே சண்டா பே (Forte Santa Fe) அல்லது சிட்டாடெலா ஒப் போர்ட்டே குரூஸ் (Cidadela of Forte Cruz) என அழைக்கப்பட்டது. இது ஒவ்வொரு மூலையிலும் நான்கு கொத்தளங்களைக் கொண்டிருந்தது. பாரிய கட்டமைப்பை இது கொண்டிராவிட்டாலும், கண்டி அரசுக்கு எதிரான சண்டையில் முக்கிய பங்காற்றியது.[1] இங்கு கூமார் 400 போர்த்துக்கேயப் படையினர் நிலைகொண்டிருந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகிறது.[2]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Pieris, Paulus Edward; Naish, Richard Bryant (1920). Ceylon and the Portuguese: 1505-1668. தெல்லிப்பழை: American Ceylon Mission press.
- ↑ "Caves, secret tunnels and a forgotten fort". Ceylon Today. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.