மெனெகினைட்டு

சல்போவுப்பு கனிமம்

மெனெகினைட்டு (Meneghinite) என்பது CuPb13 Sb7S24.[3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்போவுப்புக் கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.

மெனகினைட்டு
Meneghinite
பொதுவானாவை
வகைசல்போவுப்புக் கனிமம்
வேதி வாய்பாடுCuPb13 Sb7S24
இனங்காணல்
நிறம்கருப்பும் சாம்பலும் கலந்த நிறம்
படிக இயல்புபட்டகமும் ஊசியம், திரட்சியாக
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு{010} சரிபிளவு
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2 12
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்கருப்பு ஒளிரும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி6.36
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்
மேற்கோள்கள்[1][2][3]

நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பில் படிகமாகும் மெனெகினைட்டு மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2+1⁄2 என்ற அளவும் ஒப்படர்த்தி 6.36 என்ற அளவையும் வெளிப்படுத்துகிறது. {010} இல் சரிபிளவும் சங்குருவமும் கொண்டு கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உலோகப் பளபளப்புடன் படிகமாகிறது.[3]

1852 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டின் உலூக்கா மாகாணத்தில் மெனெகினைட்டு கண்டறியப்பட்டது. பிசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் கியூசெப் கியோவானி அண்டோனியோ மெனெகினி நினைவாக கனிமத்திற்கு மெனெகினைட்டு என்று பெயரிடப்பட்டது.[4] போட்டினோ சுரங்கத்தில் இவர் கனிமத்தைக் கண்டுபிடித்தார்.[3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மெனெகினைட்டு கனிமத்தை Meg[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மெனெகினைட்டு கனிம மாதிரி, ஆர்வார்டு பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. http://rruff.geo.arizona.edu/doclib/hom/meneghinite.pdf Handbook of Mineralogy
  3. 3.0 3.1 3.2 3.3 Mindat information page for Meneghinite
  4. The Brown Reference Group plc, ed. (2007). "Meneghinite". Treasures of the Earth. De Agostini UK Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7489-7995-0.
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனெகினைட்டு&oldid=4137902" இலிருந்து மீள்விக்கப்பட்டது