மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம்

ஒரு கணிணி மென்பொருளின் வளர்ச்சி கட்டங்கள் மற்றும் அதன் முதிர்ச்சி ஆகியவைக் கூட்டாக மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் எனப்படும். இது அதன் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து அதன் வெளியீடு வரை குறிக்கும். அம்மென்பொருளை மேன்படுத்தவே அல்லது அதில் உள்ள வழுவைக் களையவே கொண்டுவரப்படும் வெளியீடுகளும் இதில் அடங்கும்.

மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கர வரைபடம்

வளர்ச்சிக் கட்டங்கள்

தொகு

வரலாறு

தொகு

மென்பொருள் வளர்ச்சியில் பயன்படுத்தப்படும் "ஆல்பா/பீட்டா" ஆகிய குறிச்சொற்கள் ஐபிஎம்-இல் உருவானவை. 1950களில் இருந்தே ஐபிஎம் அதன் வன்பொருள் வளர்ச்சிப் பணிகளில் இத்தகைய குறிச்சொற்களை பயன் படுத்தியிருக்கிறது. ஒரு புதிய உருவாக்கத்தை அறிவிக்கும் முன்பு செய்யப்படுவது "எ" சோதனை எனவும், அதை தயாரிப்புக்கு அனுப்பும் முன் செய்யப்படுவது "பி" சோதனை எனவும், அத்தாயாரிப்பை வெளியிடுவதற்கு முன்பு செய்வது "சி" சோதனை எனவும் அழைக்கப்பட்டது. மென்பொருள் ஐபிஎம்மின் முக்கிய அளிப்புகளில் ஒன்றான பின்பு, அறிவிக்கும் முன்பு செய்யப்படுவது ஆல்பா சோதனை எனவும், ஒரு மென்பொருளின் பயன்பாட்டுத் தயார் நிலையை காட்டுவது பீட்டா சோதனை எனவும் குறிப்பிடப்பட்டது. ஐபிஎம்மின் முந்தைய மென்பொருளில் ஒன்றில் மேலாளராகப் பனியாற்றிய மார்டின் பெல்ச்கி என்பவர் இவைகளை உருவாகியாதாக உரிமையெடுத்துக்கொண்டார். 1960களில் ஐபிஎம் இந்த குறிச்சொற்களை நீக்கியது, இருப்பினும் அதற்குள் இது பரவலாக வழக்கில் வந்துவிட்டது. தான் செய்யாமல் பயனாளர்களின் மூலம் செய்யப்படும் சோதனையை ஐபிஎம் "பீட்டா சோதனை" என்றழைக்காமல் "களச் சோதனை" என்று அழைத்தது.[1]

முன்-ஆல்பா

தொகு

முன்-ஆல்பா (Pre-alpha) என்பது ஒரு மென்பொருள் சோதனைக் கட்டத்திற்கு வரும் முன் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைகளையும் குறிக்கும். தேவை ஆய்வு, மென்பொருள் வடிவமைப்பு, மென்பொருள் வளர்ச்சி, மற்றும் உருப்படி சோதனை ஆகிய அனைத்தும் இதில் அடங்கும். திரமூல மென்பொருள் உருவாக்கத்தில் பல விதமான முன்-ஆல்பா பதிப்புகள் உண்டு. குறிப்பிட்ட செயல்பாடுகளைக் கொண்டு திட்டமிட்டு, அவை நிறைவேறியவுடன் "தொலைகல்" பதிப்புகளாக வெளியிடப்படும்.

ஆல்பா

தொகு

மென்பொருளை சேதனைக்கு உட்படுத்த துவங்கக்கூடிய கட்டத்தை ஆல்பா கட்டம் எனக் குறிக்கலாம் (ஆல்பா கிரேக்கத்தில் முதல் எழுத்து என்பதால் இங்கு ஒன்று/முதல் எனபதைக் குறிக்கிறது). இக்கட்டத்தில் உருவாக்குநர்கள் பொதுவாக வெள்ளைப் பெட்டி சோதனை உத்தியைக் கையாழுவார்கள். மேலான சரிபார்த்தல் வேலையை கருப்புப் பெட்டி அல்லது சம்பல்ப் பெட்டி சோதனை உத்தியின் மூலம் வேறு ஒரு சோதணை அணி செய்யும். நிறுவணத்திற்குள் கருப்புப்பெட்டி சோதணைக் கட்டதிற்கு செல்வது ஆல்பா வெளியீடு எனக்கூறப்படுகிறது.

ஆல்பா மென்பொருட்கள் நிலையான செயல்பாடு இல்லாதவை, அதனால் தகவல் சேதாரம் ஏற்படலாம். ஆல்பா நிலையிலுள்ள தனியுரிமை மென்பொருட்கள் வெளியிடப்படுவது அரிது. இருப்பினும் திரமூல மென்பொருட்களில் ஆல்பா நிலை பொது வெளியீடு, பெரும்பாலும் மூலக் கோப்புகளாக, பரவலாக காணப்படும் ஒன்று. ஆல்பாக் கட்டம் வழக்காமாக சிறப்பியல்பு உறைவில் முடிவடையும், அதாவது அதற்குமேல் அந்த மென்பொருளில் புது சிறப்பியல்பு எதுவும் சேர்க்கப்படாது. இந்தக் கட்டத்தில் ஒரு மென்பொருள் சிறப்பியல்பு முழுமை பெற்றதாகக் கூறப்படுகிறது.

பீட்டா

தொகு

இரண்டாம் கிரேக்க எழுத்தான பீட்டாவைக் கொண்ட கட்டம் ஆல்பாக்கட்டத்திற்கான அடுத்த கட்டம் ஆகும். இது பொதுவாக சிறப்பியல்பு உறைவில் துவங்குகிறது. பீட்டா நிலையில் உள்ள மென்பொருளில் பொதுவாக முழுமை அடைந்த மென்பொருளைவிட அதிக வழுக்கள் இருக்கும், அதனால் வேகம் மற்றும் செயல்திறன் விவகாரத்துடன் தகவல் சேதாரமும், இயக்கப் பழுதும் ஏற்படலாம். பீட்டாக் கட்டதில் பெரும்பாலும் பயன்பாடு சோதணை உத்தி கொண்டு பயனாளர்களை பாதிக்கக்கூடிய வழுகளை கலைவதில் கவனம் செலுத்தப்படும். பீட்டாப் பதிப்பில் உள்ள மென்பொருளை பயனாளர்களுக்காக பொதுவாக வெளியிடுவது பீட்டா வெளியீடு எனப்படும். இந்த வெளியீட்டில்தான் ஒரு மென்பொருள் முதன்முதலாக உறுவாக்கும் நிறுவணத்திற்கு வெளியில் பயன்பாட்டிற்கும் சோதணைக்கும் பொதுவாக அளிக்கப்படுகிறது.

பீட்டாப் பதிப்பை பயன்படுத்தும் பயனாளர்கள் பீட்டா சோதணையாளர்கள் என்றழைக்கப்படுவர். இவர்கள் மெரும்பாலும் எந்த பணமும் இன்றி சோதணை செய்ய ஆர்வமுள்ள, இறுதியில் குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாகவோ அம்மென்பொருளைப் பெறும் வாடிக்கையாளர்களாகவோ அல்லது வருங்கால வாடிக்கையாளர்களாகவோ இருப்பர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Personal recollections of Allan Scherr, retired IBM fellow and software engineering executive (1960–1993)